தொலைக்காட்சி

கௌதமிடம் சிக்கித் தவிக்கும் குணசேகரனின் தம்பி.. அடுத்த பாயாசத்தை ரெடி பண்ணும் ஜீவானந்தம்

ஜீவானந்தம் இடம் வசமாக மாட்டப் போகும் குணசேகரன்.

By · 28 அக் 2023 · Updated 13 அக் 2024
Ethirneechal - Promo 14 October 2023

Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற எதிர்நீச்சல் சீரியல் கொஞ்ச நாளாகவே பார்ப்பதற்கு சுவாரசியம் இல்லாமல் இருந்தது. அதுவும் புது குணசேகரனின் நடிப்பும், பேச்சும் செட் ஆகவில்லை என்று சொல்லும் அளவிற்கு மக்கள் வெறுத்து போய்விட்டார்கள். இதனால் டிஆர்பி ரேட்டிங்கும் குறைந்துவிட்டது. இதனை சரி செய்வதற்கு தற்போது விறுவிறுப்பான கதையை கொண்டு நகர்ந்து வருகிறது.

அந்த வகையில் குணசேகரன் வீட்டில் ஏற்பாடு பண்ணின திருவிழாவில் பெரிய சம்பவம் ஒன்று நடக்க இருக்கிறது. இதில் எப்படியாவது அப்பத்தாவையும் ஜீவானந்தத்தையும் முடித்து விட வேண்டும் என்று குணசேகரன் மற்றும் கதிர் பிளான் பண்ணி இருக்கிறார்கள். ஆனால் இதே நிகழ்ச்சியில் குணசேகரனையும் கதிரையும் தண்டிப்பதற்காக ஜீவானந்தம் மற்றும் கௌதம் தனித்தனியாக காய் நகர்த்தி வருகிறார்கள்.

அதன் வாயிலாக கதிரின் வீக்னஸ் பாயிண்ட் என்னவோ அதை வைத்து அவரை தூக்க வேண்டும் என்ற நோக்கத்தில் கௌதம் ஒரு பெண்ணை ஏற்பாடு பண்ணி கதிரிடம் பேசி அவர் இருக்கும் இடத்திற்கு வர வைத்து விடுகிறார். இது தெரியாமல் கதிரும் அந்தப் பெண்ணே நம்பி கரிகாலன் மற்றும் வளவனிடம் பொய் சொல்லி போய்விடுகிறார்.

ஆனால் அங்கே போய் பார்த்தால் தான் தெரியுது இது அனைத்தும் கௌதம் ஏற்பாடு பண்ணி இருக்கிறார் என்று. தற்போது எலி வலையில மாட்டின மாதிரி கௌதமிடம் கதிர் சிக்கிவிட்டார். அத்துடன் இதுவரை கதிர் ஓவராக பண்ணின எல்லா விஷயத்துக்கும் மொத்தமாக சேர்த்து வைத்து குமுறு குமுறு என்று கௌதம் நல்ல மொத்துகிறார்.

ஆக மொத்தத்தில் கதிர் வசமாக மாட்டிக் கொண்டார். இனி குணசேகரன் மட்டும் தான் திருவிழா நிகழ்ச்சி தனியாக உலாவ போகிறார். இவருக்கும் அடுத்த பாயசத்தை ஜீவானந்தம் ரெடி பண்ணி விட்டார். அதனால் கூடிய விரைவில் குணசேகரன் வசமாக மாற்ற போகிறார். ஒருவேளை ஈஸ்வரிடம் ஜீவானந்தம் சொன்னபடி குணசேகரன் உயிருக்கே கூட ஆபத்து வரலாம்.

ஏனென்றால் அந்த அளவிற்கு ஒட்டுமொத்த வெறியுடன் ஜீவானந்தம் குணசேகரன் உயிரை நான் எடுத்து விடுவேன் என்று சொல்லி இருக்கிறார். அதனால் குணசேகரன் கதையை முடித்து விடுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. அதே நேரத்தில் அப்பத்தா அந்த 40% சொத்தை என்ன பண்ணப் போகிறார் என்பதை பார்ப்பதற்கும் ஆவலாக இருக்கிறது. அதனால் வரப்போகிற எபிசோடு பல திருப்பங்களை கொண்டு வந்து சுவாரஸ்யமாக அமையப் போகிறது.