புதன்கிழமை, ஜனவரி 15, 2025

பொறுத்தது போதும்னு பொங்கி எழுந்த எச் வினோத்.. வெட்டு ஒன்னு துண்டு ரெண்டுன்னு பேச முடியாத கமல்

Kamal and H.Vintoth: கமல் என்னதான் உச்ச நட்சத்திரங்களில் ஒரு நடிகராக இருந்தாலும், விக்ரம் படத்துக்கு முன் அவருடைய படங்கள் பெருசாக மக்களிடம் ரீச் ஆகாமல் தான் இருந்தது. அப்படிப்பட்ட கமலுக்கு செகண்ட் இன்னிங்ஸ் ஆக வாய்ப்பு கொடுத்து தூக்கி விட்டவர் தான் லோகேஷ். இதிலிருந்து கமலின் வளர்ச்சி அசுர வேகத்தில் வளர்ந்து விட்டது.

அந்த வகையில் இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலாக காத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆனால் இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து நிலையிலும் ரிலீஸ் ஆகாமல் இழுத்தடித்துக் கொண்டே இருக்கிறது. இந்நிலையில் மணிரத்தினம் கூட்டணியில் கமல், தக் லைஃப் படத்தில் கமிட் ஆகி விட்டார். இதற்கு இடையில் கமலின் 233 வது படத்தை எச் வினோத் இயக்கப் போவதாக இருந்தது.

ஆனால் கமல், மணிரத்தினத்துடன் பிஸியாகிவிட்டதால் எச்.வினோத்திற்கு சரியாக பதில் சொல்லாமல் அலைக்கழிக்க விட்டுவிட்டார். இதனால் அப்செட் ஆன வினோத் தற்போது இதற்கு இப்பவே ஒரு முடிவு கட்டியாக வேண்டும் என்பதற்காக நேரடியாக கமல் ஆபீசுக்கு சென்று பேச்சுவார்த்தை பண்ணுவதற்கு போய்விட்டார்.

Also read: நந்துவாக நடித்தது கமல் இல்லையா.? அடப்பாவிங்களா, வெளியே சொல்லாமலே மறச்சுட்டீங்களே!

நேரடியாக எச்.வினோத் கமலிடம் போய் கேட்டதால், அவரால் வெட்டு ஒன்று துண்டு ரெண்டுன்னு பேச முடியாமல் போய்விட்டது. அதனால் கமல், வினோத்திடம் நான் கண்டிப்பாக உங்க கூட்டணியில் படம் பண்ணுவேன் என்ற வாக்குறுதியை கொடுத்துவிட்டார். அதனால் இவர்கள் கூட்டணியில் உருவாக்க போகும் படத்தை அடுத்த வருடம் மார்ச் மாதம் துவங்கலாம் என்று பிளான் பண்ணி இருக்கிறார்கள்.

அதே நேரத்தில் மணிரத்தினம் ப்ராஜெக்ட்டையும் ஓகே பண்ணி ரெண்டையும் ஒரே சமயத்தில் நடிப்பதற்கு முடிவெடுத்து இருக்கிறார். கமலைப் பொறுத்தவரை ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிப்பது ரொம்பவே ஈஸியான ஒரு விஷயம் தான். அத்துடன் இரண்டு படங்களிலுமே கமல் நடிக்கும் காட்சிகளுக்கு மட்டும் அவர் இருந்தால் போதும்.

மற்ற சீன்கள் எடுக்கும் போது தேவை இல்லாமல் கமல் டைம் செலவழிக்க வேண்டாம். அந்த வகையில் அடுத்த வருடங்களில் கமல் நடிப்பில் வெளியாகும் படங்கள் லிஸ்ட் இந்தியன் 2, தக் லைஃப் மற்றும் கமலின் 233 வது படம். இதற்கிடையில் தயாரிப்பாளராகவும் இளம் நடிகர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அதன் மூலமும் கல்லா கட்டுவதற்கு பிளான் பண்ணி வருகிறார். ஆக மொத்தத்தில் நாலா பக்கமும் வசூலில் வேட்டையாட தயாராகி விட்டார்.

Also read: அறிவுள்ள கமல் பேசிய அநாவசிய பேச்சு.. ஆழ்வார்பேட்டைக்காரரின் அறிவு கூவல்

Trending News