வெள்ளிக்கிழமை, ஜனவரி 3, 2025

இந்த ஸ்டைலில் படம் பண்ணுங்க.. கமல் வார்த்தையால் எரிச்சலான ஹெச்.வினோத்

Kamal-H.Vinoth: விக்ரம் கொடுத்த இமாலய வெற்றியால் குஷியாகி போன உலகநாயகன் இப்போது தயாரிப்பு, நடிப்பு என ரெக்கை கட்டி பறந்து கொண்டிருக்கிறார். அதிலும் அவருடைய அடுத்தடுத்த படங்களின் அறிவிப்பு ரசிகர்களை திக்கு முக்காட செய்துள்ளது.

இதில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்டு வரும் படம் தான் KH233. ஹெச் வினோத், கமல் கூட்டணியில் உருவாகும் இப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் ஆரவாரமாக வெளியானது. அது மட்டுமல்லாமல் இது விவசாய சம்பந்தப்பட்ட படம் என்ற பேச்சும் எழுந்தது.

Also read: கமல்- வாணி திருமணத்தில் மாப்பிள்ளை தோழனாக நின்ற ரஜினி.. 45 வருடத்திற்கு பின் ட்ரெண்டாகும் புகைப்படம்

அதனாலயே ரசிகர்கள் உலகநாயகன் சரியான சம்பவத்திற்கு தயாராகிவிட்டார் என்று ஆர்ப்பரித்து வந்தனர். ஆனால் இப்போது இது ஆளவந்தான் பட ஸ்டைலில் உருவாகிறது என தெரிய வந்துள்ளது. இது என்ன புது ட்விஸ்ட்டா இருக்கு என்று விசாரித்ததில் ஒரு சில தகவல்கள் கிடைத்துள்ளது.

அதாவது வினோத் கமலுக்காக ஒரு கதையை பார்த்து பார்த்து ரெடி செய்து கொடுத்திருக்கிறார். ஆனால் அது அவருக்கு திருப்தி தராத பட்சத்தில் பல மாறுதல்களை சொல்லி இருக்கிறார். இப்படியே தொடர்ந்து மூன்று முறை ஸ்கிரிப்ட் மாற்றி அமைக்கப்பட்டு இருக்கிறது.

Also read: பெரிய இயக்குனர்களுக்கு கமல் கொடுத்த 5 தரமான ப்ளாக்பஸ்டர்ஸ்.. ஒரே முறையோடு நிறுத்திக் கொண்ட உலகநாயகன்

அதிலும் அதிருப்தி அடைந்த கமல் அவரே ஒரு கதையை தயார் செய்து இதை லாக் பண்ணுங்க என்று வினோத்திடம் கொடுத்திருக்கிறார். அதற்கான வேலைகள் தான் இப்போதே ஜோராக நடந்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் கமல் தயார் செய்த கதை ஒரு மிலிட்டரி சம்பந்தப்பட்ட கதையாம்.

ஆளவந்தான் படத்திற்கு பிறகு மீண்டும் அப்படி ஒரு கதையில் நடிக்கப் போகும் கமல் அதற்கான பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார். இப்படி மொத்த கதையையும் மாற்றியதால் நொந்து போன வினோத் இதுக்கு என்னையும் சேர்த்து மாத்திட்டு ஒரு சம்பவத்தை நடத்தி இருக்கலாம் என்று புலம்பி வருகிறாராம்.

Also read: கமலஹாசனால் வெளியில் தலை காட்ட முடியாத நிலைமை.. இது என்னடா சிம்புவுக்கு வந்த சோதனை

Trending News