பிக் பாஸ் சீசன் 3 மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர் லாஸ்லியா. இந்நிகழ்ச்சியில் கவின் உடன் ஏற்பட்ட காதல் அப்போது சர்ச்சையாக வெடித்தது. மேலும் இந்நிகழ்ச்சியை தொடர்ந்து லாஸ்லியாவுக்கு ஏகப்பட்ட பட வாய்ப்புகள் வர தொடங்கியது.
கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் உடன் இணைந்த பிரண்ட்ஷிப் படத்தில் லாஸ்லியா நடித்திருந்தார். இந்த படத்திற்கு பெரிய அளவு வரவேற்பு கிடைக்கவில்லை. இதைதொடர்ந்து இயக்குனர் கே எஸ் ரவிக்குமார் தயாரித்து, நடித்த கூகுள் குட்டப்பா படத்தில் தனது நண்பர் மற்றும் பிக்பாஸ் போட்டியாளரான தர்ஷன் உடன் இணைந்து லாஸ்லியா நடித்திருந்தார்.
ஆனால் இந்தப்படமும் எதிர்பார்த்த அளவு போகவில்லை. இப்படத்திற்கு ஏகப்பட்ட நெகட்டிவ் கமெண்ட்ஸ்களும் வந்தது. ஆனால் லாஸ்லியா தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார். சமீபத்தில் அஸ்வினுடன் இணைந்து ஒரு ஆல்பம் சாங்கில் லாஸ்லியா நடித்திருந்தார்.
இந்நிலையில் லாஸ்லியா தனது உடம்பை வெகுவாக குறைத்துள்ளார். சமீபத்தில் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சில புகைப்படங்கள் லாஸ்லியா லீக்ஸ் என்ற பெயரில் வெளியாகியிருந்தது. இந்தப் புகைப்படத்தைப் பார்த்து லாஸ்லியா ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
அதாவது அந்த புகைப்படத்தில் லாஸ்லியா படு ஸ்லிம்மாக ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு இருந்துள்ளார். ஆனால் அந்த புகைப்படத்தை லாஸ்லியா பதிவிடவில்லையாம். லாஸ்லியா யாருக்கும் தெரியாமல் பொத்தி பொத்தி வைத்திருந்த போட்டோவை ஹேக்கர்கள் கைவரிசை காட்டி அவருடைய இன்ஸ்டாகிராம்மை ஹேக் செய்து பதிவிட்டுள்ளனர்.
அதன்பிறகு லாஸ்லியா ஹேக்கர்கள் வசமிருந்த தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தை மீட்டெடுத்து உள்ளார். அதன் பிறகு முதல் வேலையாக ஹேக்கர்கள் பதிவிட்ட அந்த புகைப்படங்களை நீக்கியுள்ளார். அவன் பிறகு பழையபடி தற்போது லாஸ்லியா தனது புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்.
