ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

ஹன்சிகாவின் கேரியருக்கு வந்த ஆபத்து.. இந்த ஒரே காரணத்தால் அதலபாதாளத்திற்கு செல்ல போகும் மார்க்கெட்

ஹன்சிகா மோத்வானி சினிமாவுக்கு வந்த புதிதில் அதிர்ஷ்டம் ஜெட் வேகத்தில் வந்தது. விஜய், தனுஷ், சிம்பு போன்ற முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்து வந்தார். குஷ்புக்கு பிறகு இவருடைய தோற்றம் ரசிகர்களுக்கு பிடித்து போக இவரை தலையில் தூக்கி வைத்து கொண்டாடினார்கள்.

ஆனால் அவரது மார்க்கெட் குறுகிய காலத்திலேயே சரியா தொடங்கியது. சமீபகாலமாக ஹன்சிகா நடிப்பில் வெளியான படங்கள் எதுவும் சரிவர போகவில்லை. மேலும் கடைசியாக மகா என்ற படத்தில் சிம்புவுடன் இணைந்து ஹன்சிகா நடித்திருந்தார். இந்த படமும் படுமோசமான தோல்வி அடைந்தது.

Also Read : அரண்மனையில் திருமண சந்தோஷத்தில் ஹன்சிகா ஜோடி.. நச்சுனு கிஸ் அடித்த வைரலாகும் புகைப்படங்கள்

இவ்வாறு ஹன்சிகாவின் கேரியர் தரிகிடதோம் ஆடி வரும் நிலையில் இப்போது அவரது நிலைமை மிகவும் மோசமாக மாற உள்ளது. அதாவது சமீபத்தில் மிகப் பிரம்மாண்டமாக ஹன்சிகா திருமணம் நடைபெற்றது. இதனால் தான் இப்போது ஹன்சிகாவின் மார்க்கெட்டுக்கு ஆபத்து வந்துள்ளது.

அதாவது ஹன்சிகா கைவசம் ஒன்பது படங்கள் உள்ளது. இதில் 6 படங்கள் தமிழிலும், 3 படங்கள் மலையாள மொழியிலும் உருவாகி வருகிறது. மேலும் மூன்று படங்கள் தற்போது வரை விலை போகாமல் கிடப்பில் கிடைக்கிறது. இவ்வாறு ஹன்சிகாவின் படங்கள் ரிலீஸ் ஆகாமல் தண்ணி காட்டி வருகிறது.

Also Read : தோழியின் கணவரை வளைத்துப் போட்ட ஹன்சிகா.. வருங்கால கணவர் முதல் மனைவியுடன் இருக்கும் வைரல் புகைப்படம்

இதற்குக் காரணம் ஹன்சிகாவுக்கு சமீபத்தில் நடந்த திருமணம் தான் இன்று பலரும் கூறி வருகிறார்கள். ஏனென்றால் ஹீரோயின்களுக்கு திருமணத்திற்கு முன்பு வரை தான் மார்க்கெட் இருக்கும். ஆனால் அப்போதே ஹன்சிகாவின் மார்க்கெட் சரிய தொடங்கி விட்டது.

ஆகையால் இப்போது சொல்லவா வேண்டும், அம்மனிக்கு திருமணம் ஆகிவிட்டதால் இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும் சற்று தூரத்தில் வைத்து தான் ஹன்சிகாவை பார்த்து வருகிறார்கள். அதனால் ஹன்சிகாவின் கேரியருக்கு பெரும் சிக்கல் உருவாகும் என்பதில் சந்தேகமில்லை.

Also Read : கொழுகொழுன்னு இருந்த நம்ம ஹன்சிகாவா இது? எலும்பும் தோலுமாக மாறிய லேட்டஸ்ட் போடோஸ்!

Trending News