ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

இன்று ஜெய்ப்பூர் அரண்மனையில் கோலாகலமாக நடந்த ஹன்சிகாவின் திருமணம்.. கணவருடன் சேர்ந்து போட்ட குத்தாட்டம்

தமிழ் சினிமாவில் சின்ன குஷ்பு என ரசிகர்களால் செல்லமாக அழைக்கப்படுபவர் நடிகை ஹன்சிகா மோத்வானி. முன்னணி நடிகையாக வலம் வரும் ஹன்சிகா, தனது நீண்ட கால நண்பரை ஹன்சிகா விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளார் என்ற தகவல் வெளியானது.

அதாவது தொழில்பர் சோஹைல் கதுரியா என்பவரை டிசம்பர் 4ம் தேதி ஆன இன்று திருமணம் செய்து கொண்டார். இதற்கு முன்பாக நடிகர் சிம்புவை காதலித்து வந்த ஹன்சிகா சில காரணங்களினால் அவரை பிரேக்கப் செய்தார். இதைத்தொடர்ந்து மகா படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் சிம்பு நடித்திருந்தார்.

Also Read: கொழுகொழுன்னு இருந்த நம்ம ஹன்சிகாவா இது? எலும்பும் தோலுமாக மாறிய லேட்டஸ்ட் போடோஸ்!

இதைத்தொடர்ந்து மீண்டும் சிம்புவுடன் ஹன்சிகா இணைய உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால் தனது நீண்ட கால நண்பரை ஹன்சிகா தற்போது கரம் பிடித்துள்ளார். எனவே ஹன்சிகா-சோஹைல் கதுரியா இவர்களது திருமணம் மிகப் பழமை வாய்ந்த ஜெய்ப்பூர் அரண்மனையில் பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு கோலாகலமாக நடந்திருக்கிறது.

நேற்றைய தினம் சங்கீத் நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில் அதில் ஹன்சிகா தன்னுடைய கணவருடன் சேர்ந்து குத்தாட்டம் போட்டிருக்கிறார். தற்போது சோசியல் மீடியாவில் வைரலாக பரவுகிறது. அத்துடன் இன்று அழகான உடையில் மணமக்கள் காணப்பட்டனர்.

கணவருடன் சேர்ந்து குத்தாட்டம் போட்ட ஹன்சிகா

hanshika-cinemapettai
hanshika-cinemapettai

Also Read: அரண்மனையில் நடக்கவுள்ள ஹன்சிகா திருமணம்.. புதுமாப்பிள்ளைக்கு தடபுடலாக நடக்கும் ஏற்பாடு

அதற்கு முன்னதாக நடைபெற்ற மற்றொரு நிகழ்ச்சியில் இவர்கள் வெள்ளை நிற உடைகள் மிகவும் அழகான நடனமாடிய புகைப்படம் ரசிகர்களிடம் வைரலாகிறது. இவர்களது திருமணத்தில் பாலிவுட் மற்றும் கோலிவுட் வரை குறிப்பிட்ட சில பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.

ஜெய்ப்பூர் அரண்மனையில் ஹன்சிகாவின் திருமணம்

hanshi-1-cinemapettai
hanshi-1-cinemapettai

இந்நிலையில் திரை பிரபலங்களும் ரசிகர்களும் சோசியல் மீடியாவில் ஹன்சிகாவிற்கு திருமண வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களது திருமணத்தை ஒளிபரப்பு செய்யும் உரிமையை டிஸ்னி பிளஸ் ஹாட் ஸ்டார் பெற்றுள்ளதால் விரைவில் ஹன்சிகாவின் முழு திருமண வீடியோவும் வெளியாகும் என்று ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் .

Also Read: தோழியின் கணவரை வளைத்துப் போட்ட ஹன்சிகா.. வருங்கால கணவர் முதல் மனைவியுடன் இருக்கும் வைரல் புகைப்படம்

Trending News