Hardik Pandya and Malinga clash in Mumbai team: கிரிக்கெட் ஐபிஎல் 17 சீசன் பரபரப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ரசிகர்கள் விளையாட்டை ஆர்வமாக கண்டு களித்து வருகின்றனர். ஒவ்வொரு போட்டியும் உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தி ரசிகர்களை குதூக்கலிக்க வைக்கிறது.
இந்நிலையில் “ஒரே குடும்பம் ஒரே அணி” என்று மார்தட்டிக் கொள்ளும் மும்பை இந்தியன்ஸ் அணியில் அடிக்கடி ஏற்படும் சண்டைகளுக்கும் சலசலப்புக்கும் பஞ்சமில்லை.
மும்பை இந்தியன்ஸ் அணியில் கேப்டனாக ஹர்திக் பாண்டியாவும், பவுலிங் பயிற்சியாளராக மலிங்காவும் தனது பங்களிப்பை திறம்பட ஆற்றி வருகிறார்கள்.
ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் ஐந்து முறை கோப்பையை வென்றது மும்பை இந்தியன்ஸ் அணி. இதற்கு பயிற்சியாளர் மலிங்காவும், கேப்டன் ரோகித் சர்மாவும் ஒரு காரணமாய் இருந்துள்ளனர்.
இந்த சீசனில் ஹர்திக் பாண்டியா கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டது ரசிகர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியது.
மேலும் பாண்டியா, ரோகித் சர்மாவை பவுண்டரி லைனுக்கு பக்கத்தில் பில்டிங் பண்ண வைத்தது ரசிகர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
பயிற்சியாளரை அவமதித்த பாண்டியா
கடைசியாக நேற்று முந்தைய தின ஆட்டத்தில் ஹைதராபாத் அணியை அதிக ரன் எடுக்க வைத்து பவுலிங்கில் சொதப்பினர் மும்பை அணியினர்.
பவுலிங் சரியில்லை பந்துவீச்சாளர்கள் சரியாக செயல்படவில்லை என்று புகார் எழுந்தது. இறுதியாக ஆட்டத்தில் மரண அடி வாங்கி வெளியேறியது மும்பை அணி.
ஆட்ட முடிவில் பயிற்சியாளர் மலிங்கா, கேப்டன் ஹர்திக் பாண்டியாவை கட்டியணைத்து ஆறுதல் சொல்ல முற்பட்டபோது, பாண்டியா அவரைக் கண்டு கொள்ளாது தட்டி விட்டு சென்றார்.
இலங்கை அணியின் ஜாம்பவானும் பவுலிங்கில் திறமையான ஆட்டக்காரருமான மலிங்காவை அவமானப்படுத்திய ஹர்திக் பாண்டியாவின் செயல் கண்டனத்திற்குரியது என்று போர்க்கொடி தூக்கி உள்ளனர் கிரிக்கெட் ஆர்வலர்கள்.
தலைக்கனத்தில் உச்சம் தொட்டு உள்ள ஹர்திக் பாண்டியாவை கேப்டன் பதவியில் இருந்து விலக கோரி கோஷங்கள் எழுந்து உள்ளன.
மும்பை அணியில் நாளுக்கு நாள் பிரச்சனைகள் மற்றும் மோதல் அதிகமாகி வருவதால் ரோகித் சர்மா கேப்டனாக மாற்றப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதாக தெரிகிறது.