சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

தொடர் மன அழுத்தம், சோர்வு, நாட்டை காலி செய்த ஹர்திக் பாண்டியா.. 20 ஓவர் உலகக் கோப்பைக்கு ஏற்பட்ட ஆபத்து

ஹார்பிக் பாண்டியா மும்பை அணியின் கேப்டனாக 2024 ஐபிஎல் கோப்பையில் விளையாடினார். ரோகித் சர்மாவிடமிருந்து கேப்டன் பொறுப்பை பிடுங்கிவிட்டார் என தொடர்ந்து பல சர்ச்சைகள் இவர் மீது விழுந்து பேசு பொருளாக மாறினார். இப்படி இருக்கும் பட்சத்தில் ஐபிஎல் மோசமான தோல்வி இவருக்கு மிகுந்த சோர்வழித்துள்ளது.

14 போட்டியில் விளையாடி வெறும் 4 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் கடைசியாக இருந்தது மும்பை அணி. முதல் அணியாக ஐபிஎல் இல் இருந்தும் வெளியேறி பெரும் இன்னல்களை சந்தித்தது. மும்பை அணியின் ஓனரான அம்பானி அணியின் செயல்பாடுகள் மோசமாக உள்ளது என வெளிப்படையாகவே கூறிவிட்டார்.

ரோகித் சர்மா கேப்டனாக இருந்தால் மும்பை அன்னிக்கு இப்படி ஒரு நிலைமை வந்திருக்காது, பாண்டியாவிற்கு அணியை வழிநடத்த தெரியவில்லை என புகார்கள் எழுந்தன. ரோஹித் சர்மாவிடமிருந்து கேப்டன் பதவியை பறித்ததன் மூலம் இவரை சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் அவதூறாக பேசினார்கள்.

இப்படி விளையாட்டில் அடி வாங்கியது ஒரு பக்கம் இருக்க, சமீபத்தில் அவரது மனைவி அவரை விவாகரத்து பண்ணி விட்டார் என்றும் வேறு ஒரு நண்பருடன் வாழ்ந்து வருகிறார் என்றும் புரளிகள் கிளம்பின.

20 ஓவர் உலகக் கோப்பைக்கு ஏற்பட்ட ஆபத்து

விளையாட்டிலும் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பாண்டியாவிற்கு கடும் மன அழுத்தம் ஏற்பட்டது. இதனால் பிசிசிஐ இடம் அனுமதி வாங்கி வெளிநாட்டுக்கு சென்று விட்டார் ஹார்திக் பாண்டியா. தற்சமயம் அங்கே தான் மருத்துவர்கள் இடம் கவுன்சிலிங் பெற்று வருகிறார். அமெரிக்கா அல்லது லண்டன் இந்த இரண்டு இடங்களில் ஏதேனும் ஒரு நாட்டில் தான் இருக்கிறார்.

ஹார்திக் பாண்டியா முழுமையாக இந்த பிரச்சனையில் இருந்து வெளியே வந்தால் தான் 20 ஓவர் உலகக் கோப்பை விளையாட முடியும். இந்த தொடரில் அவர் இந்திய அணிக்கு துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஹார்திக் பாண்டியா போல் ஒரு அதிரடி ஆல்ரவுண்டர் 20 ஓவர் உலகக் கோப்பையில் விளையாடாமல் போவது இந்திய அணிக்கு ஆபத்து.

Trending News