ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

ஐபிஎல் போட்டிகளால் உருவாகும் பிரச்சனை.. சீனியர் வீரரிடமே சண்டைக்கு போன ஹர்திக் பாண்டியா

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் குஜராத் லயன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டி நேற்று விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடந்தது. இதில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த போட்டியில் முதலில் ஆடிய குஜராத் லயன்ஸ் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 162 ரன்கள் குவித்தது .இந்த போட்டியில் குஜராத் அணியின் கேப்டன் மட்டுமே பொறுப்புடன் விளையாடி 42 பந்துகளில் 50 ரன்களை குவித்து அணியை ஓரளவு கரை சேர்த்தார்.

அன்பின் தனது இன்னிங்சை தொடங்கிய ஹைதராபாத் அணி 20 ஆவது ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 168 ரன்கள் குவித்து 8 விக்கெட்வித்தியாசத்தில் வென்றது. அந்த அணி குஜராத் லயன்சின் பந்துவீச்சை எளிதாக எதிர்கொண்டு துவம்சம் செய்தது.

ஐதராபாத் அணியில் அதிகபட்சமாக கேப்டன் கேன் வில்லியம்சன் 46 பந்துகளில் 50 ரன்கள் குவித்தார். போட்டியின் ஆட்ட நாயகன் விருதையும் அவரே தட்டிச் சென்றார். இந்த போட்டியில் நேற்று ஹர்திக் பாண்டியா மிகவும் மோசமாக நடந்து கொண்டார். சீனியர் வீரர் என்று கூட பார்க்காமல் கேட்ச் பிடிப்பதை தவறவிட்ட முகமது சமியை வசைபாடினார்.

ராகுல் திருபாதி கொடுத்த எளிதான கேட்சை தவற விட்டதால் ஒரு சீனியர் வீரர் என்று கூட பார்க்காமல் அந்த இடத்திலேயே திட்டி விட்டார் ஹர்திக் பாண்டியா இதனால் சமூக வலைதளங்களில் அவருக்கு பயங்கர எதிர்ப்பு கிளம்பி வருகிறது.

இந்த ஐபிஎல் போட்டிகளால் வீரர்களுக்குள் ஒரு பிளவு ஏற்படுகிறது. இதற்கு முன்னரும் ஒரு போட்டியில் கவுதம் கம்பீரும், விராட் கோலியும் மோதிக்கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இதை தடை செய்யும்படி முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கூறி வருகின்றனர்.

Trending News