வெள்ளிக்கிழமை, பிப்ரவரி 21, 2025

கடப்பாறை அணியவே கந்தலாக்கிய ஹார்திக் பாண்டியா.. விக்கெட்டே வேணாம்னு போக்கு காட்டிய இங்கிலாந்து.

இங்கிலாந்து அணிக்கு எதிராக நேற்று ராஜ்கோட்டில் நடைபெற்ற மூன்றாவது 20 ஓவர் போட்டியில் இந்திய அணி ஹார்திக் பாண்டியாவால் தோல்வியை சந்தித்தது. ஐந்து 20 ஓவர் போட்டிகள் மற்றும் முன்று 50 ஓவர்கள் போட்டிகள் கொண்ட தொடரை 2 -1 என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகிக்கிறது.

நேற்றைய போட்டியில் இங்கிலாந்து அணி ஆதிக்கம் செய்தது. டாஸ் ஜெயித்து இந்திய அணி பந்துவீச்சை தேர்ந்தெடுத்தது முதலில் ஆடிய இங்கிலாந்து நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 171 ரன்கள் குவித்தது. இந்திய தரப்பில் வருண் சக்கரவர்த்தி ஐந்து விக்கெட்டுகளை எடுத்தார்.

பின்னர் ஆடிய இந்திய அணி ஆரம்பத்தில் இருந்தே விக்கெட்டுகளை இழந்தது. ஒரு கட்டத்தில் 85ரண்களுக்கு 5 விக்கெட்களை இழந்து தடுமாறியது. ஹர்திக் பாண்டியா தான் இந்த தோல்விக்கு முழு பொறுப்பேற்க வேண்டும் என முன்னாள் வீரர்கள் குறிப்பிட்டு வருகின்றனர்.

ஆறாவது ஓவர் ஆரம்பத்தில் ஹார்திக் பாண்டியா சூரியகுமார் விக்கெட்டுக்கு பின் களம் இறங்கினார். ஆனால் 18 ஓவர் வரை விளையாடிய போதிலும் ரன்கள் சேர்க்க முடியவில்லை. கடைசியில் பார்த்துக் கொள்ளலாம் என டெஸ்ட் போட்டி போல் விளையாடினார்.

9 பேட்ஸ்மேன்கள் இருந்த போதிலும் நாம் நின்று ஜெயித்து விடலாம் என மனகோட்டை கட்டி மோசமான ஆட்டத்தை தொடர்ந்தார். ஒரு கட்டத்தில் இங்கிலாந்து வீரர்கள் இவர் விக்கெட் வேண்டாம், இவருக்கு போட்டி கிளிக் ஆகவில்லை என இவருக்கு ஸ்லோ பால்களை அதிகம் வீசினார்கள். அவர் முன்கூட்டியே அவுட் ஆனால் கூட ஏதாவது மாற்றம் ஏற்பட்டிருக்கும்.

Trending News