சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

மறைமுகமாக செம டோஸ் விட்ட ஹரி.. மாஸ் ஹீரோவுக்கு நடந்த அவமானம்

அருண் விஜய்யின் யானை படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் ரி என்ட்ரி கொடுத்துள்ளார் இயக்குனர் ஹரி. இவர் வித்தியாசமான கதைகளின் மூலம் தொடர் வெற்றி படங்களை கொடுத்து வந்தார். மேலும் மிகக் குறுகிய காலத்திலேயே முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வளர்ச்சி அடைந்தார் இயக்குனர் ஹரி.

தற்போது டாப் நடிகர்களாக உள்ள விக்ரம், சிம்பு, சூர்யா போன்ற ஹீரோக்களை வளர்த்து விட்டதில் இயக்குனர் ஹரிக்கு முக்கிய பங்கு உண்டு. நடிகர் விக்ரமுக்கு சாமி, அருள் என மாஸ் ஹிட் படங்களை ஹரி கொடுத்திருந்தார். அதேபோல் சூர்யாவுக்கு ஆறு, சிங்கம், சிங்கம் 2 போன்ற சூப்பர் ஹிட் படங்களை தந்துள்ளார்.

Also Read : ஹரி விளையாடி தெறிக்கவிட்ட 5 படங்கள்.. முக்கிட்டு எடுத்த 3வது பார்ட் என்னாச்சு தெரியுமா?

இந்நிலையில் சிம்புவின் கேரியரில் கோவில் படம் மிக முக்கியமான படமாகும். இப்படத்தை ஹரி தான் இயக்கியிருந்தார். கோவில் படத்தின் படப்பிடிப்பு போது சிம்பு எப்போதுமே காலதாமதமாக தான் வருவாராம். அதாவது இரவு 9 மணி படப்பிடிப்புக்கு 11 மணிக்கு தான் வருவாராம்.

அப்போது சிம்பு ஹீரோ என்பதால் நேரடியாக ஹரியால் அவரை கண்டிக்க முடியவில்லை. இதனால் சிம்பு முன்னிலையில் ஹரி அசிஸ்டன்ட் டைரக்டரை அழைத்த ஸ்பாட்டிலே செம டோஸ் விட்டாராம். உனக்கு சரியா சம்பளம் தரேன்னு அப்புறம் எதுக்கு இவ்வளவு லேட்டா வர என திட்டி உள்ளார்.

Also Read : ஹரி, லிங்குசாமி பட தோல்விக்கு இதான் முக்கிய காரணம்.. பல கோடி போட்டு விழிபிதுங்கும் தயாரிப்பாளர்கள்

ஹரி திட்டியது தனக்குத்தான் என புரிந்து கொண்ட சிம்பு மறுநாள் இருந்து சரியான நேரத்திற்கு படப்பிடிப்புக்கு வந்து விட்டாராம். ஒருவரிடம் எப்படி சொன்னால் வேலைக்கு ஆகும் என்பதை சரியாகப் புரிந்து வைத்திருப்பவர் இயக்குனர் ஹரி. இதனால் அவரை கோபக்காரர் என்றும் சிலர் கூறுகிறார்கள்.

தனக்கான வேலை நடக்க வேண்டும் என்றால் சில சமயங்களில் இவ்வாறு கடுமையாக நடந்து கொள்ள வேண்டியுள்ளது. இயக்குனர் ஹரியை போல தான் பாலாவும் நடிகர், நடிகைகளிடம் திறமையான நடிப்பை வாங்குவதில் வல்லவர். இதனால் தான் ஹரி, பாலா போன்ற இயக்குனர்களின் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு இருக்கிறது.

Also Read : சிங்கம் படத்தில் ஏமாற்றி நடிக்க வைத்த ஹரி.. இப்பவரை கண்ணீர்விட்டு புலம்பும் பிரபல நடிகை

Trending News