வெள்ளிக்கிழமை, நவம்பர் 29, 2024

அடுத்த ரவுண்டுக்கு ரெடியான அக்கா.. சென்டிமென்ட் பார்த்து அவரையே நடிக்க செய்த இளையதளபதி!

தற்போது உலகநாயகன் கமலஹாசன் உடன் விஜய்சேதுபதி, பகத் பாசில் உள்ளிட்டோர் தங்களது நடிப்பை மிரள விட்டிருக்கும் விக்ரம் படம் திரையரங்கில் வசூல் வேட்டையாடிக் கொண்டிருக்கிறது. விக்ரம் படத்தை தொடர்ந்து தளபதி 67-வது படத்தையும் லோகேஷ் கனகராஜ் தான் இயக்கப் போகிறாராம்.

இந்த படத்தில் ஹீரோயினாக யாரை போடுவது என்ற ஒரு பேச்சு அடிபட்டது. அந்த நிலையில் விஜய் இதற்கு ஒரு பெரிய சென்டிமெண்ட் பார்த்து பழைய ரோஸ் மில்க் அக்கா நடிகையை போட்டுள்ளார். ஏனென்றால் விஜய் அந்த நடிகையுடன் ஜோடி போட்ட படங்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் கொடுத்தது.

அதாவது விஜய் உடன் தெறி, கத்தி, மெர்சல் ஆகிய படங்களில்சேர்ந்து நடித்த சமந்தா தான். அதனால் லோகேஷ் கனகராஜ் தளபதி விஜய்யை வைத்து இயக்கவிருக்கும் அவருடைய அறுபத்து ஏழாவது படத்தில் சமந்தா ஹீரோயினாக விஜய்யுடன் மீண்டும் நான்காவது முறையாக ஜோடி சேர உள்ளார்.

விவாகரத்துக்குப் பின் விஜய்யுடன் சமந்தா நடிக்கும் படம் இது. சமாந்தா தற்போது விஜய் தேவரகொண்டா உடன் ‘குஷி’ என்ற தெலுங்கு படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் நிலையில், அந்தப் படத்திற்கான இரண்டாம் கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் நடைபெற்றது.

அதைத்தொடர்ந்து இறுதிக்கட்ட படப்பிடிப்பு நடைபெற உள்ளது. வருகின்ற டிசம்பர் 23ஆம் தேதி ரிலீசாக இருக்கும் சமந்தாவின் குஷி படத்தை அடுத்து தளபதியின் அறுபத்து ஏழாவது படத்தில் இணைகிறார். இந்தப் படத்தில் சமந்தா விஜயுடன் வித்தியாசமாக என்ட்ரி கொடுக்க வாய்ப்பு இருக்கிறது.

அத்துடன் இளைய தளபதியும் இப்பொழுது விஜய் 66 படத்தில் தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் பிஸியாக நடித்து கொண்டிருக்கிறார். இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்துக்கொண்டிருக்கிறார். இந்த படம் முழுக்க முழுக்க சென்டிமென்ட் படம் என்பதால் தளபதியின் 67-வது படத்தை குறித்த அப்டேட்டை தெரிந்து கொள்வதற்காகவே தளபதி ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

- Advertisement -spot_img

Trending News