வெள்ளிக்கிழமை, டிசம்பர் 27, 2024

ஆண்டவருக்கே தண்ணி காட்டும் பிக்பாஸ் இவர் தான்.. அவரது கம்பிர குரலுக்கு மட்டும் இத்தனை லட்சம் சம்பளமா.!

Biggboss 7: பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றிக்கு கமல் ஒரு காரணமாக இருக்கிறார். ஆனால் கண்ணுக்கே தெரியாமல் ஆட்டிப்படைக்கும் அந்த குரலும் முக்கிய காரணம் என்பதை மறுக்க முடியாது. 24 மணி நேரமும் போட்டியாளர்களை கவனித்து ஆர்டர் போடுவதிலிருந்து தக் லைஃப் காட்டுவது வரை பிக்பாஸின் அட்ராசிட்டி வேற லெவலில் இருக்கும்.

அதேபோன்று சோர்ந்து போய் வீட்டுக்கு போறேன் பிக் பாஸ் என கதறும் போட்டியாளர்களை தட்டிக் கொடுத்து ஊக்கம் தரவும் இவர் தயங்க மாட்டார். அதனாலயே இந்த ஏழு சீசன்களாக இந்த குரலுக்கு ரசிகர்கள் பலரும் அடிமையாக இருக்கின்றனர்.

அப்படிப்பட்ட இந்த குரலுக்கு சொந்தமானவர் தான் சதீஷ் சாரதி சாஷோ. பாலிவுட் நடிகரான இவர் பின்னணி குரல் கொடுப்பவர் மட்டுமல்லாமல் சிறந்த பாடகரும் கூட. அதேபோன்று WWE தமிழ் பதிப்பிற்கு குரல் கொடுப்பவரும் இவர்தான். மஞ்சுநாத்- இடியட் தா சாலா என்பது தான் இவரின் முதல் படமாகும்.

Also read: மேய்க்கிறது எரும இதுல என்ன பெரும ஜோவிகா.. தமிழை கொன்னு கூறு போடும் வாயாடி பெத்த பொண்ணு

இப்படி பல்வேறு திறமைகள் கொண்ட இவர் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியின் முக்கிய அங்கமாக இருக்கிறார். அதனாலயே இவருக்கு மாதம் லட்சக்கணக்கில் சம்பளமும் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் முகத்தை காட்டாமல் குரலை வைத்து மிரட்டியே இவர் மாதம் 6 லட்சம் சம்பளமாக பெறுகிறார்.

தற்போது இந்த பிக் பாஸின் வீடியோ தான் சோசியல் மீடியாவை கலக்கிக் கொண்டிருக்கிறது. மக்களின் நீங்க யாரு என்ற கேள்விக்கு இவர் என்னுடைய தேடலும் அதுதான் என்று தனக்கே உரிய அந்த கணீர் குரலில் கூறுகிறார். இதை பார்த்த பலரும் உங்கள் குரலுக்கும் உங்களுக்கும் சம்பந்தமே இல்லை என கூறி வருகின்றனர்.

ஆண்டவருக்கே தண்ணி காட்டும் பிக்பாஸ் இவர் தான்

biggboss
biggboss

அந்த அளவுக்கு பிக்பாஸ் ரொம்பவும் சாதுவாக தெரிகிறார். அந்த வகையில் குருநாதா, தல என போட்டியாளர்களால் பல பெயர் வைத்து அழைக்கப்படும் இந்த பிக்பாஸின் போட்டோ தற்போது வைரலாகி கொண்டிருக்கிறது.

Also read: பேசிக்கிட்டே இருந்தா எப்படி அடிச்சு காட்டுங்க.. வெறி கொண்ட சிங்கத்தை சுரண்டி விட்ட பிக்பாஸ் குட்டி சாத்தான்

Trending News