புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

சீரியலில் பட்டையை கிளப்பும் சினிமா இயக்குனர்.. அதிக சம்பளம் வாங்கும் நடிகர்

டிஆர்பி-யில் மற்ற சேனல்களுக்கு எல்லாம் பயங்கர டஃப் கொடுக்கும் சன் டிவியின் புத்தம் புது சீரியல்கள் இனியா மற்றும் எதிர்நீச்சல். அதிலும் எதிர்நீச்சல் சீரியலில் பலருடைய வெறுப்பை சம்பாதித்தாலும் அந்த சீரியலின் வெற்றிக்கு முக்கிய காரணமாக குணசேகரன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் பிரபல இயக்குனர் ஜி மாரிமுத்து.

தற்போது சின்னத்திரையில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக மாறி உள்ளார். இவர் சீரியலில் யதார்த்தமாக நடிக்க வந்தவர். ஆனால் இவருக்கு எதிர்நீச்சல் சீரியலில் கிடைத்த அமோக வரவேற்பினால் சினிமாவை விட சீரியலில் பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கிறார்.

Also Read: டிஆர்பி-யில் அடித்து நொறுக்கும் டாப் 6 சீரியல்கள்.. இணையத்தை தெறிக்க விடும் லிஸ்ட் இதோ.!

தொடக்க காலத்தில் ராஜ்கிரணிடம் உதவி இயக்குனராக சேர்ந்த இவர் படிப்படியாக வளர்ந்து ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் மூலமாக இயக்குனராக அறிமுகமானார். ஆனால் இத்திரைப்படம் வசூல் ரீதியாக எந்த ஒரு பெயரையும் பெற்று தரவில்லை எனினும் முயற்சி கைவிடாமல் ‘புலிவால்’ திரைப்படத்தையும் இயக்கினார்.

பிறகு இயக்குனராக மட்டுமல்லாமல் தனக்கு நடிக்க தெரியும் என்பதை காண்பிப்பதற்காக யுத்தம் செய் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமானார். இவரது எதார்த்தமான நடிப்பினால் பலரையும் ஈர்த்து ஆரோகணம், நிமிர்ந்து நில், கொம்பன், மருது மற்றும் கத்தி சண்டை போன்ற படங்களில் தனது எதார்த்தமானன நடிப்பை காட்டியுள்ளார்.

Also Read: ஏற்கனவே உருட்டுனது பத்தாதா?. விரைவில் வெளிவர உள்ள பார்ட் 2 சீரியல்

என்னதான் நாம் வெள்ளித்திரை நோக்கி படையெடுத்தாலும் சின்ன திரையின் மீது உள்ள மோகம் மக்களிடம் குறையவில்லை. எனவே இவரை மக்கள் தினமும் பார்க்கும் வகையில் எதிர்நீச்சல் நாடகம் இவருக்கு கை கொடுத்தது. இந்த சீரியல் மூலம் இவர் தன்னுடைய நடிப்பால் தற்போது சின்னத்திரையில் நடிக்கும் ஹீரோ ஹீரோயின்சை எல்லாம் ஓரம் கட்டி விட்டார்.

அதிலும் இவர் தனக்கான ஒரு ஃபேண்பேஸை சின்னத்திரையில் உருவாக்கி வெற்றிகரமாக பயணித்துக் கொண்டிருக்கிறார். இதனால் இவர் சின்னத்திரையில் அதிக சம்பளம் வாங்கும் நடிகராகவும் இருந்து வருகிறார். முயற்சி திருவினையாக்கும் என்ற பழமொழிக்கு ஏற்ப இவர் வாழ்ந்து காட்டிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: ஓவர் குடி, குக் வித் கோமாளி அரங்கில் மட்டையான போட்டியாளர்.. உடனே தூக்கிட்டு விஜய் டிவி பிரபலத்திற்கு வாய்ப்பு

Trending News