புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

டிக்கெட் டூ பினாலே ஜெயிக்க போறது இவர்தான்.. சேனலின் மானத்தை காப்பாற்ற மட்டமான வேலை செய்யும் விஜய் டிவி

விஜய் டிவியில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது. நிகழ்ச்சியின் ஆரம்பத்திலிருந்து பெரிய அளவில் சுவாரஸ்யம் இல்லாமல் இருந்த இந்த சீசன் முடிய போகும் தருவாயிலும் அப்படியே தான் இருக்கிறது. இருந்தாலும் இந்த சீசன் டைட்டிலை வெல்ல போகும் போட்டியாளர் யார் என்பதை தெரிந்து கொள்ள ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.

அந்த வகையில் தற்போது பிக் பாஸ் வீட்டில் டிக்கெட் to பினாலேவுக்கான போட்டி ஆரம்பிக்கப்பட்டிருக்கிறது. இதில் போட்டியாளர்களுக்கு தங்கள் திறமையை நிரூபிக்கும் வகையிலான கடுமையான டாஸ்க்குகள் கொடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நேற்றைய எபிசோட் பயங்கர ரணகளமாக இருந்தது.

Also read: 87 நாட்கள் பெய்டு ஹாலிடேக்கு வந்தீங்களா.? பிக் பாஸ் ரசிகையின் கேள்வியை வைத்து அசிங்கப்படுத்திய அசீம்

அதன் முடிவில் போட்டியாளர்கள் விளையாடியதன் அடிப்படையில் மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதில் யாரும் எதிர்பார்க்காத வகையில் அமுதவாணன் தான் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டுள்ளார். அவருக்கு அடுத்தபடியாக மைனா, ரட்சிதா, கதிர் ஆகிய மூவரும் அடுத்தடுத்த இடங்களை பிடித்துள்ளனர்.

இதுதான் தற்போது பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்திருக்கிறது. ஏனென்றால் பிக் பாஸ் வீட்டில் பெரிய அளவில் தங்கள் திறமையை நிரூபிக்காத போட்டியாளர்கள் தான் இவர்கள். ஆனால் இவர்கள் டாப் இடங்களில் இருக்கும் போது இந்த சீசன் முழுவதும் அதிக கன்டென்ட் கொடுத்த போட்டியாளர்கள் குறைந்த மதிப்பெண்களை பெற்றது தான் வேடிக்கையாக இருக்கிறது.

Also read: சுடச்சுட வெளியான 13 வது வார நாமினேஷன் லிஸ்ட்.. 7 பேரில் உறுதியாக வெளியேறும் போட்டியாளர்

அந்த வகையில் ஏடிகே, சிவின், விக்ரமன், அசீம் ஆகியோர்களுக்கு குறைந்த மதிப்பெண்கள் தான் கிடைத்திருக்கிறது. அதிலும் சீசன் முழுவதும் பயங்கர அலப்பறை கொடுத்து வந்த அசீம் கடைசி இடத்தில் இருக்கிறார். இதிலிருந்தே விஜய் டிவியின் ராஜதந்திரம் நமக்கு தெளிவாக தெரிகிறது. அதாவது தங்கள் சேனலின் மானத்தை காப்பாற்றுவதற்காகவே விஜய் டிவி இப்படி ஒரு வேலையை பார்த்திருப்பதாகவும் ரசிகர்கள் கூறுகின்றனர்.

ஏனென்றால் இந்த சீசனின் டாப் போட்டியாளர்களாக சிவின், விக்ரமன், அசீம் ஆகியோர் நிச்சயம் இருப்பார்கள் என்று பலரும் எதிர்பார்த்து வருகின்றனர். ஆனால் விஜய் டிவி வேற ஒரு பிளான் போட்டு வருகிறது. அதிலும் ரசிகர்களின் அதிக வெறுப்பை சம்பாதித்து வந்த அமுதவாணன் முதலிடத்தில் இருப்பது பேரதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. இருப்பினும் இந்த வார இறுதிவரை இந்த போட்டி நடக்கும் என்பதால் இந்த டிக்கெட்டை யார் வெல்வார்கள் என்ற ஆர்வம் அனைவருக்கும் அதிகரித்துள்ளது.

Also read: சும்மா தின்னுட்டு தின்னுட்டு டைட்டில வின் பண்ணலாம்னு நினைச்சீங்களா?. போட்டியாளர்களை வச்சி செஞ்ச பிக் பாஸ்

Trending News