புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

உண்மையான பிக்பாஸின் குரலுக்கு சொந்தக்காரர் இவர்தான்.. கடந்த சீசனை விட உயர்ந்த சம்பளம்

விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக் பாஸ் சீசன் 6 அக்டோபர் 9ஆம் தேதி துவங்கப்பட்டு, இரண்டாவது வாரத்தில் இருக்கிறது. இதில் 10 பெண் போட்டியாளர்களும், 9 ஆண் போட்டியாளர்களும், திருநங்கை ஒருவரும் மொத்தமாக 20 பேர் பங்கேற்ற நிகழ்ச்சியை காரசாரமாக கொண்டு செல்கின்றனர்.

இந்நிலையில் பிக் பாஸுக்கு பின்னணி குரல் கொடுக்கும் பிரபலம் குறித்தும், அவரது சம்பளம் பற்றிய விபரமும் தற்போது இணையத்தில் வெளியாகி பரபரப்பாக பேசப்பட்டுக் கொண்டிருக்கிறது.

Also Read: தரமான போட்டியாளரை இறக்கிய விஜய் டிவி.. பிக்பாஸிலும் துவங்கிய சக்களத்திச் சண்டை

இதுவரை நடந்து முடிந்த ஐந்து சீசன்களையும் மட்டுமல்லாமல் தற்போது நடந்து கொண்டிருக்கும் 6-வது சீசனுக்கும் குரல் கொடுப்பவர் நடிகர் சாஷோ என்ற சதீஷ் சாரதி சச்சிதானந்தம். இவர் சினிமாவிலும் சில படங்களில் நடித்திருக்கிறார்.

இவர் தான் பிக்பாஸ் குரலுக்குச் சொந்தக்காரர். மேலும் இவருக்கு நடந்து முடிந்த ஐந்து சீசன்களுக்கு மாதம் 5 லட்சம் சம்பளமாக கொடுக்கப்பட்டது.  ஆனால் தற்போது நடந்து கொண்டிருக்கும் 6-வது சீசனில் ஒரு லட்சம் கூடுதலாக, ஒரு மாதத்திற்கு 6 லட்சம் சம்பளம் வாங்குகிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது.

Also Read: பிக்பாஸில் தாக்கு பிடிக்க முடியாத 2 போட்டியாளர்கள்.. வெளியேறப் போறது உறுதி, இதுதான் காரணம்

அதாவது இவருக்கு ஒரு நாளைக்கு சம்பளம் இருபதாயிரம் ரூபாய் என்று கூறப்படுகின்றது. இதைக்கேட்டதும் பிக்பாஸ் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். குரல் கொடுப்பதற்கு இவ்வளவு சம்பளமா என்றும் பலரும் வியப்பில் உள்ளனர்.

இருப்பினும் இவருடைய கணீர் குரல் தான் பிக்பாஸ் என்றதும் பலருக்கும் ஞாபகம் வரும். ஆகையால்தான் ரசிகர்களுக்கு பரிச்சயமான இந்த குரலையே தொடர்ந்து 6 சீசன்களிலும் வைத்து, விஜய் டிவி தங்கள் டிஆர்பி ரேட்டிங்கை எகிற விடுகின்றனர்.

பிக்பாஸின் குரலுக்கு சொந்தக்காரர்

bb-voice-cinemapettai
bb-voice-cinemapettai

Also Read: வைல்ட் கார்டு என்ட்ரியாகும் ஆண்ட்டி நடிகை.. ஒரு நாள் சம்பளத்தை கேட்டு வாயை பிளக்கும் முன்னணி நடிகைகள்

Trending News