வெள்ளிக்கிழமை, ஜனவரி 24, 2025

வாய்ப்பு கொடுத்தவருக்கே டிமிக்கி கொடுக்கும் விக்கி.. உன் சங்காத்தமே வேண்டான்னு கும்பிடு போட்ட ஆண்டவர்

இயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு விழாத அடியே இல்லை என சொல்லும் அளவிற்கு பல அடிகளை வாங்கி குவித்து வருகிறார். குறிப்பாக லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாராவை திருமணம் செய்ததற்கு பின்பு தமிழ் சினிமாவில் அவர் இருக்கும் இடமே தெரியாமல் போய்விட்டது. அதிலும் முக்கியமாக நயன்தாரா பாலிவுட்டில் கால் பதித்து பல படங்களில் கமிட்டாகியுள்ளார். ஆனால் விக்னேஷ் சிவன் வந்த வாய்ப்பும் இல்லாமல் போய்விட்டதே என புலம்பி வருகிறாராம்.

ஆரம்பத்தில் இயக்குனர் விக்னேஷ் சிவன் நடிகர் அஜித்தை வைத்து ஏகே62 படத்தை இயக்குவதாக இருந்தது. ஆனால் இப்படத்தின் கதைக்களம் அஜித்துக்கு பிடிக்காமல் போகவே விக்னேஷ் சிவன் அப்படத்திலிருந்து நீக்கப்பட்டார். அந்த சம்பவம் நடந்ததிலிருந்து விக்னேஷ் சிவனுக்கு அடுத்து என்ன செய்வதென்றே தெரியவில்லை என்ற அளவுக்கு சென்றுவிட்டார்.

Also Read: எல்லாத்துக்குமே பலிக்கிடாவா மாறிய விக்னேஷ் சிவன்.. அடுத்த ஆடு கிடைக்காமல் நொந்து நூடுல்ஸான இயக்குனர்

ஆனால் தனது மனைவி நயன்தாராவின் சிபாரிசில் பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடிக்க வைத்து அந்த படத்தை விக்னேஷ் சிவன் இயக்குவார் என அறிவிப்பு வெளியானது. மேலும் இப்படத்தில் நயன்தாரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும், உலகநாயகன் கமலஹாசன் இப்படத்தை தயாரிப்பார் என்றும் கூறப்பட்டது. சயின்ஸ் பிக்ஷன் கதைக்களத்துடன் இப்படம் 100 கோடி பட்ஜெட்டில் உருவாகும் எனவும் அறிவிப்பு வெளியானது.

ஆனால் இப்படத்தின் அறிவிப்பு வந்து 6 மாதங்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில், இப்படம் குறித்து எந்த ஒரு அப்டேட்டும் வராமல் உள்ளது. அதற்கான காரணம் தற்போது வெளியாகி மீண்டும் விக்னேஷ் சிவனுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே கமலஹாசன் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சி, இந்தியன் 2 படம், சிவகார்த்திகேயனின் படத்தை தயாரிப்பது என ரொம்பவே பிஸியாக உள்ளார்.

Also Read: அழகில் மயங்கி நடிகைகளை கல்யாணம் செய்த 5 இயக்குனர்கள்.. கில்லாடி வேலை பார்த்த விக்னேஷ் சிவன்

மேலும் நயன்தாராவும் தனது பங்குக்கு பல பிஸினஸ்களை ஆரம்பித்து அதில் ஆர்வம் செலுத்தி வருகிறார். பிரதீப் ரங்கநாதனும் தனது அடுத்த படத்தின் கதையை மும்முரமாக எழுதி வருகிறாராம். இதற்கு இடையில் விக்னேஷ் சிவன் இப்படத்தை இயக்குவதற்காக 10 கோடிவரை சம்பளம் கேட்ட நிலையில், கமலஹாசன் இப்படத்தை தயாரிக்க தயக்கம் காட்டி வருகிறாராம்.

மேலும் பிரதீப் ரங்கநாதன் இப்படத்தில் நடிக்க 20 கோடி சம்பளம் கேட்டதையடுத்து மொத்தமாக இப்படத்தை இழுத்து மூடிவிடலாம் என முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான காரணம் விக்னேஷ் சிவனை நம்பி 100 கோடி பட்ஜெட் போட்டு படத்தை எடுக்க கமல் விரும்பவில்லை என்பதால் இப்படத்தை அப்படியே கைவிட்டு விடலாம் என முடிவு செய்துள்ளாராம். இதனால் தற்போது விக்னேஷ் சிவன் தலை உருண்டு வருகிறது.

Also Read: விக்னேஷ் சிவன், ரவீந்தர் வரிசையில் இப்போ கீர்த்தி பாண்டியன்.. என்கிட்ட இல்லாதது உங்ககிட்ட என்ன இருக்கு

Trending News