வெள்ளிக்கிழமை, நவம்பர் 15, 2024

ரஜினி கமல் ஒரே நாளில் மோதிக்கொண்ட 5 படங்கள்.. இரண்டு படங்களில் மூக்கை உடைத்துக் கொண்ட உலகநாயகன்

Rajinikanth-Kamal Haasan: 1970களில் இருந்து தற்போது வரை ஒருவருக்கு ஒருவர் பயங்கர போட்டியாக இருப்பவர்கள் தான் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலக நாயகன் கமல்ஹாசன். இவர்கள் இருவரின் திரைப்படங்கள்தான் சூப்பர் ஹிட் படமாக வைரலாகும். இவர்களின் படங்களுக்கிடையே எப்போதுமே, ரசிகர்கள் மத்தியில் மோதல் இருந்து கொண்டே தான் இருக்கும். அப்படி ஒன்னுக்கு ஒன்னு சலச்சதில்ல என்று சொல்வது போல மோதலுக்கு உள்ளான 5 திரைப்படங்கள் பார்ப்போம்.

தூங்காதே தம்பி தூங்காதே- தங்கமகன்: 1983 நவம்பர் 4 லில் வெளியான திரைப்படங்கள், எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் உருவான “தூங்காதே தூங்காதே தம்பி” திரைப்படத்தில் கமல்ஹாசன் நடித்து வெளியான படம் ஆகும், சுமார் 175 கோடி வசூலை குவித்தது. அதற்கு போட்டியாக ஜெகநாதன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான திரைப்படம் தான் “தங்க மகன்” இது ஒரு ஆக்சன் திரில்லர் திரைப்படம் ஆகும். பூர்ணிமா ஜெயராம், ஜெய்சங்கர், சில்க் ஸ்மிதா போன்றோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் சுமார் 100 கோடி வசூலை அள்ளியது.

Also Read:70களிலிருந்து இன்று வரை தமிழ் சினிமாவின் 5 ஜென்டில்மேன்ஸ்.. கண்ணியம் தவறாத ரஜினியின்நண்பர்

நல்லவனுக்கு நல்லவன் – எனக்குள் ஒருவன்: 1984ல் அக்டோபர் 22ல், எஸ்.பி முத்துராம் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த “நல்லவனுக்கு நல்லவன்” திரைப்படம் வெளியானது. இது தெலுங்கிலும் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. இதில் ராதிகா, கார்த்தி போன்றோர் நடித்துள்ளனர். வசூல் சுமார் 150 கோடி ஆகும். அதற்கு டப் குடுக்கும் வகையில் எஸ் பி முத்துராமனின் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த “எனக்குள் ஒருவன்” என்ற இசை சார்ந்த திரைப்படம் வெளியானது. இத்திரைப்படம் சுமார் ௧௦௦ கோடி வசூலை குவித்தது.

காக்கிச்சட்டை – நான் சிகப்பு மனிதன்: 1985இல் வெளியான திரைப்படங்கள், ராஜசேகர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து உருவான திரைப்படம் “காக்கிச்சட்டை” ராஜசேகர், அம்பிகா, சத்யராஜ், தேங்காய் சீனிவாசன் போன்றோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 150 கோடி வசூலை குவித்தது. எஸ் ஏ சந்திரசேகர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த “நான் சிகப்பு மனிதன்” ஆக்சன் திரில்லர் திரைப்படமும் ரிலீஸ் ஆனது. இதில் பாக்கியராஜ், அம்பிகா போன்றவர்கள் நடித்துள்ளனர். இத்திரைப்படத்தில் தளபதி விஜய் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார். சுமார் 100 கோடி வசூலை வசூலித்தது.

Also Read:இந்த வருடம் திருமணம் செய்து கொள்ள போகும் 5 நட்சத்திரங்கள்.. முடிவுக்கு வந்த பிரேம்ஜியின் முரட்டு சிங்கிள் வேஷம்

படிக்காதவன்- ஜப்பானின் கல்யாணராமன்: 1985 நவம்பர் 11ல் ராஜசேகர் இயக்கத்தில் ரஜினிகாந்த், சிவாஜி கணேசன், அம்பிகா இணைந்து நடித்து வெளியான திரைப்படம் “படிக்காதவன்”. இத்திரைப்படத்தில் இருந்து ரஜினிகாந்த்திற்கு ரசிகர்கள் அதிகமாகி விட்டனர். திரைப்படத்தின் வசூல் சுமார் 235 கோடி ஆகும். அந்த வருடத்தின் அதிக நாள் ஓடிய திரைப்படமும் இதுவே ஆகும். “ஜப்பானில் கல்யாணரான்” அதே நாள் வெளியானது எஸ் பி முத்துராமன் இயக்கத்தில் கமல்ஹாசன், ராதா, சத்யராஜ் போன்றோர் இணைந்து நடித்த வெளியான திரைப்படமாகும். நகைச்சுவை கலந்த சட்டவிரோதமான செயல்களை வெளியே கொண்டு வரும் திரைப்படம். ஆனால் மக்களிடையே போதிய வரவேற்பு கிடைக்காமல் போனதால் பிளாப் ஆகி மொக்கை வாங்கினார் உலகநாயகன்.

தளபதி -குணா: 1991 நவம்பர் 5 வெளியான , மணிரத்தினம் இயக்கத்தில் ரஜினிகாந்த், மம்முட்டி கூட்டணி திரைப்படம் “தளபதி”. இது திரில்லர் திரைப்படம், அரவிந்த்சாமி, ஜெய்சங்கர், ஸ்ரீவித்யா, பானுப்பிரியா, ஷோபனா போன்றோர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் அமோக வசூலும் குவித்தது. அதே சமயத்தில் சந்தான பாரதி இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான “குணா” திரைப்படம் ஒரு மனநல பாதிக்கப்பட்டவனின் காதல் கதை திரைப்படமாகும் . இதில் கமல், ரேகா, ரோஷினி போன்றோர் நடித்துள்ளனர். ஆனால் இதுவும் சரியாக போகாமல் மண்ணை கவ்வினார் கமல்.

Also Read:மீண்டும் தமிழ் மார்க்கெட்டை பிடித்த கீர்த்தி சுரேஷ்.. கைவசம் இவ்வளவு படங்களா.

- Advertisement -spot_img

Trending News