வியாழக்கிழமை, டிசம்பர் 26, 2024

கமல்ஹாசனின் All Time Favourite-டான 6 சிறந்த படங்களின் லிஸ்ட்.. தரமா இருக்கே.!

கமல்ஹாசன் நடிப்பில் வெளியான அத்தனை படங்களுமே திரைப்படக் கல்லூரி மாணவர்கள் முதல் ரசிகர்கள் வரை எல்லோருக்குமே முக்கியமான படங்களின் வரிசையில் இடம்பிடிக்கும். அந்த வரிசையில் 6 முக்கியமான படங்களை இப்போது பார்க்கலாம்.

குருதிப்புனல்

நடிகர் கமல்ஹாசன், அர்ஜூன், கெளதமி, நாசர் ஆகியோர் நடிப்பில், பி.சி. ஸ்ரீராம் இயக்கத்தில் கடந்த 1995 ஆம் ஆண்டு வெளியான படம் குருதிப்புனல். இப்பத்திற்கு மகேஷ் மகாதேவன் இசையமைத்திருந்தார். ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரித்திருந்தது. இப்படத்தில் முதன் முதலாக டால்பி ஒலி சிஸ்டம் பயன்படுத்தப்பட்டது. கோவிந்த் நிஹ்லானி இயக்கத்தில் 94 ஆம் ஆண்டு வெளியான துரோக்கால் என்ற இந்திப் படத்தின் ரீமேக் இதுவாகும். திரைக்கதை, வசனம் கமல் எழுயிருந்தார்.

இப்படத்தில் பயங்கரவாத இயக்கங்களின் நடவடிக்கைகளை ஒடுக்கும் காவல்துறை அதிகாரிகளாக கமல்ஹாசனும் அர்ஜூனும் நடித்திருந்தனர். மூத்த அதிகாரியாக டிஐஜியாக கே.விஸ்வநாத் நடித்திருந்தனர். ஒரு போலீஸ், திரில்லர் படத்துக்கு உதாரணமாக எல்லோராலும் பரிந்துரைக்கப்படுகிறது.

விருமாண்டி

ஒரு சினிமாவை இப்படியும் எடுக்க முடியுமா என்பதற்கு இப்படம் உதாரணமாக உள்ளது. ராஷோமோன் விளைவு என்ற திரைக்கதை வழியை இப்படம் கையாண்டது. இப்படத்திற்கு கதை, திரைக்கதை, இயக்கம், நடிபு, தயாரிப்பை கமல்ஹாசன் மேற்கொண்டார். இளையராஜா இசையமைத்திருந்தார். கமலுடன் இணைந்து அபிராமி, பசுபதி, நெப்போலியன், ரோகிணி ஆகியோர் நடித்திருந்தனர்.

இப்படத்தில் மரண தண்டனை தேவையில்லை என்ற கருத்து வலியுறுத்தப்பட்டிருந்தது. இப்படம் வசூல் ரீதியாக வெற்றி பெற்றாலும், சாதி, அரசியல் பேசியதால் இப்படம் கடும் விமர்சனங்களை சந்தித்தது.

ஹேராம்

கமல்ஹாசனின் முக்கிய திரைப்படங்களில் ஒன்று. இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம், நடிப்பு, தயாரிப்பை கவனம் மேற்கொண்டார். கமலுடன் இணைந்து ஹேமமாலினி, ராணி முகர்ஜி, கிரீஷ் கர்னாட் ஆகியோர் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்திருந்தார்.

இப்படம் வெளியான போது விமர்சகர்களின் கவனம் பெற்றது. குறிப்பாக, காந்தியின் கொலைக்குப் பின்னால் இயங்கிய சித்தாந்தத்தை வெளிப்படுத்தியதாக இப்படத்தைப் பலரும் பாராட்டினர். அதேசமயம், இது இந்துத்துவத்துக்கு எதிரான, ஆதரவான படம் என ஒருவேறு பார்வைகளும் இப்படத்துக்கு வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

விஸ்வரூபம்

தமிழ் சினிமாவை அடுத்தகட்டத்துக்கு நகர்த்திய படங்களில் ஒன்று விஸ்வரூபம். இதன் பட்ஜெட், ஹாலிவுட் ஸ்டைலில் மேக்கிங், கதை, திரைக்கதை என எல்லாமே பெரிதும் பாராட்டப்பட்டது. இப்படத்தை கமல், இயக்கி, திரைக்கதை எழுதி, தயாரித்திருத்து நடித்திருந்தார். இப்படத்தில் அவருடன் இணைந்து ஆண்ட்ரியா, பூஜாகுமார், ராகுல் போஸ் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.

இப்படத்தில் விஸ்வநாதனாக நடித்திருந்த கமல் உண்மையில் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவர், அவர் எவ்வாறு தப்பிச் செல்கிறார் இப்படத்தில் அவருக்கு என்ன நடந்தது என்பதைப் பற்றி விறுவிறுப்புடன் கமல் திரைக்கதை வடிவமைத்து காட்சிப்படுத்தியிருந்தார். இப்படம் 100 கோடியில் எடுக்கப்பட்டு அப்போதே 200 கோடி வசூலித்தது குறிப்பிடத்தக்கது.

நாயகன்

மணிரத்னம் இயக்கத்தில் கமல் நடிப்பில் முக்தா சீனிவாசன் தயாரித்த படம் நாயகன். இப்படத்தில் கமலுடன் இணைந்து ஜனகராஜ், சரண்யா, டெல்லி கணேஷ் நடித்திருந்தனர். இளையராஜா இசையமைத்திருந்தார். லெனில் எடிட் செய்திருந்தார். இப்படம் மும்பையில் தாதாவாகிய விளங்கிய வரதராஜன் முதலியாரின் வாழ்க்கையை அடிப்படையாக கொண்உ எடுக்கப்பட்ட படம் இது. 1988 ஆம் ஆண்டே இப்படம் ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டது இந்தியா சார்பில். கமல் – மணிரத்னம் கேரியலில் இது முக்கியமான படமாக அமைந்தது. உலகின் 100 சிறந்த படங்கலில் ஒன்றாக டைம் வார இதழ், சிஎன்என், ஐபிஎன் நிறுவனம் ஆகியவை தேர்வு செய்தது குறிப்பிடத்தக்கது.

தேவர்மகன்

கமல்ஹாசனின் திரைக்கதை வசனம் நடிப்பில், பரதன் இயக்கத்தில் கடந்த 1992 ஆம் ஆண்டு வெளியான படம் தேவர்மகன். இப்படத்தில் கமலுடன் இணைந்து சிவாஜி கணேசன், வடிவேலு, கெளதமி, ரேவதி, நாசர் ஆகியோர் நடித்திருந்தனர்.

இப்படத்தின் திரைக்கதை கதை மற்றும் திரைக்கதை மொத்தம் ஏழு நாட்களில் முடித்த நிலையில், இத்திரைப்படம் ஆஸ்கர் விருதுக்கும் பரிந்துரைக்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இப்படம் சாதியைப் பற்றிப் பேசியதாக விமர்சிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Trending News