ஞாயிற்றுக்கிழமை, டிசம்பர் 22, 2024

4 வருசமா சம்பளம் வாங்குவதில் முதலிடத்தில் இருக்கும் ஹீரோ.. கமல் சம்பளத்துக்கும் வச்ச ஆப்பு

High Paid Actor: தமிழ் சினிமாவில் விஜய், அஜித், ரஜினிகாந்த் போன்ற பெரிய ஹீரோக்கள் கிட்டத்தட்ட 200 கோடிகள் சம்பளமாக பெறுகிறார்கள் ஆனால் அவர்களையும் ஓவர் டேக் செய்து தொடர்ந்து நாலு வருடமா முதலிடத்தில் இருக்கிறார் நடிகர் ஒருவர். பல தோல்வி படங்கள் கொடுத்தாலும் நம்பர் ஒன் இடத்தை மட்டும் யாருக்கும் விட்டுக் கொடுப்பதில்லை.

வருடத்திற்கு 400 முதல் 450 கோடிகள் வரை சம்பளம் பெறுகிறார், மற்ற பெரிய ஹீரோக்கள் எல்லோரும் இரண்டு மூன்று படங்கள் நடித்தால் இவர் சம்பளத்தை நெருங்கலாம் ஆனால் இவர் ஒன்று அல்லது இரண்டு படங்கள் நடித்த இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக பெறுகிறார்.

பாகுபலி பிரபாஸுக்கு எல்லா மொழிகளிலும் இரசிகர்கள் ஏராளம். இப்பொழுது இவர் நடிப்பில் உருவாகி வரும் பெரிய பட்ஜெட் படத்திற்கு இவரது சம்பளம் 210 கோடிகள். கிட்டத்தட்ட 750 கோடி பட்ஜெட்டில் உருவாகி வருகிறது கல்கி படம். இந்த படத்தில் இவருக்கு வில்லனாக கமல் நடிக்கிறார்.

கமல் சம்பளத்துக்கும் வச்ச ஆப்பு

கல்கி படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி படு மொக்கை வாங்கி உள்ளது. அதாவது கிறிஸ்து பிறந்த பின், வரப்போகும் 2898 AD ஆண்டுகளில் உலகம் எப்படி இருக்கும் என்பதை காட்டுகிறார்கள். கரன்சி என்ற பேச்சுக்கே அங்கு இடம் இல்லை. எல்லோரும் யூனிட் என்ற ஒரு வார்த்தையை கூறி, இருக்கிறது என்கிறார்கள்.

இந்த படத்தில் கமலுக்கு சம்பளம் 150 கோடிகள். இந்த படம் வசூல் சாதனை செய்தால் தான் கமல் அடுத்த படத்திற்கு கூடுதலாக சம்பளம் பேச முடியும். இல்லையென்றால் அண்ணாத்த படத்திற்கு பின் ரஜினி சம்பளத்தை குறைத்தது போல் கமலும் குறைக்க நேரிடும்.

பாகுபலிக்கு பின் பிரபாஸுக்கு சொல்லிக் கொள்ளும்படி எந்த படமும் ஓடவில்லை. ராதே சாம், சலார், சகோ என அத்தனை படங்களும் ஃப்ளாப். இருந்தாலும் பிரபாஸின் சம்பளம் ஆண்டுக்கு 450 கோடிகள். இரண்டு படங்கள் நடித்தாலும் இவ்வளவு சம்பளம் அதிகம் தான். தொடர்ந்து முதலிடத்தில் இருக்கும் இவர் கல்கி படம் ஓடாவிட்டால் ஆட்டம் கண்டு விடுவார்.

Trending News