புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

கமலுக்கு முன்பே சிம்ரனுடன் கிசுகிசுக்கப்பட்ட ஹீரோ.. செம கெமிஸ்ட்ரியில் வெளிவந்த 4 படங்கள்

நடிகை சிம்ரன் நடிக்க வந்த இரண்டு ஆண்டுகளிலேயே தனது நடிப்பு, நடனம், அழகு உள்ளிட்ட திறமையால் ரசிகர்களை கவர்ந்து கனவுக்கன்னியாக தற்போது வரை பலரது மனதில் வலம் வருபவர். சிம்ரன் கமலஹாசனுடன் அதிகமாக கிசுகிசுக்கப்பட்ட நடிகையாக இருந்த போதிலும், சாக்லேட் பாய் நடிகரான பிரஷாந்துடன் 4 படங்களில் நடித்தார். அப்படி இவர்கள் நடிப்பில் வெளியான 4 படங்களை பற்றி தற்போது பார்க்கலாம்.

கண்ணெதிரே தோன்றினாள்: 1998 ஆம் ஆண்டு இயக்குனர் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் சிம்ரன், பிரஷாந்த் ஜோடி முதன்முதலாக இணைந்த படம். தேவா இசையில் வெளியான இப்படத்தின் ஒவ்வொரு பாடல்களும் ஹிட்டான நிலையில், காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் மாபெரும் ஹிட்டானது.

Also Read: தாலி கட்டிய பின் சினிமாவிற்கு முழுக்கு போட்ட 5 நடிகைகள்.. கல்லா காலியானதால் மீண்டும் நடிக்க வந்த சிம்ரன்

ஜோடி : 1999 ஆம் ஆண்டு இயக்குனர் பிரவீன் காந்தி இயக்கத்தில் வெளியான இப்படத்தில், சிம்ரன், பிரசாந்த் ஜோடி பெருமளவில் பேசப்பட்டது. ஏ.ஆர் ரஹ்மான் இசையில் வெளியான, இப்படத்தின் ஒவ்வொரு பாடல்களும் பட்டித்தொட்டியெங்கும் வரவேற்கப்பட்டது. இப்படம் சிம்ரன் மற்றும் பிரசாந்தின் கேரியருக்கு முக்கிய படமாக அமைந்தது.

பார்த்தேன் ரசித்தேன் : இயக்குனர் சரண் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் சிம்ரன், லைலா, பிரஷாந்த், ராகவா லாரன்ஸ் உள்ளிட்டோர் நடித்திருப்பர். ஒருதலையாக காதலிக்கும் சிம்ரனின் நடிப்பு இப்படத்தில் பேசப்பட்டது. இசையமைப்பாளர் பரத்வாஜ் இசையில் வெளியான இப்படத்தின் ஒவ்வொரு பாடல்களும் படத்தின் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தது.

Also Read: சிம்ரன், ஜோதிகா ரெண்டு குதிரைகளையும் ஒரே சமயத்தில் ஓட்டுற போல.. விஜய் சொன்னதாக சர்ச்சையை கிளப்பும் வாரிசு நடிகர்

தமிழ் : 2002 ஆம் ஆண்டு நடிகர் பிரஷாந்த், சிம்ரன் நடிப்பில் வெளியான தமிழ் படம் தான் இவர்கள் இருவரும் ஜோடியாக இணைந்து நடித்த கடைசி படமாகும். இயக்குனர் ஹரி இயக்கத்தில் வெளியான இப்படத்தில் நாசர், வடிவேலு, மனோரமா உள்ளிட்ட பலர் நடித்திருப்பர். இப்படத்தின் வெற்றியையடுத்து பெங்காலி மொழியில் ரீமேக் செய்யப்பட்டது.

Also Read:வாலி படத்தில் நடிக்கும் வாய்ப்பை தவறவிட்ட 3 நடிகைகள்.. கடைசியாக தேர்வான இடுப்பழகி சிம்ரன்

Trending News