வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

அடமொழிக்கு ஆசைப்படாத 6 நடிகர்கள்.. கோடி கும்பிடு போட்டு ஓடிய தனுஷ்

திரைப்படத்தில் நடிகர்களின் பெயர்களுக்கு முன்னாள் அடைமொழியுடன் ரசிகர்களின் கைத்தட்டலுடன் திரையிடுவர்.அந்த வகையில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்,உலக நாயகன் கமலஹாசன், தளபதி விஜய், அல்டிமேட் ஸ்டார் அஜித்குமார் என்று இதுபோல பல நடிகர்களின் பெயர்களுக்கு முன்னாள் அடைமொழி பெயர்கள் உண்டு .

ஆனால் தற்போது வளர்ந்து வரும் பல நடிகர்கள் இன்று வரை தங்களது பெயருக்கு முன்னாள் எந்த ஒரு அடைமொழியையும் வைக்காமல் நடித்து வருகின்றனர். அப்படிப்பட்ட நடிகர்கள் யார் என்ற தொகுப்பை தற்போது பார்க்கலாம்.

தனுஷ்: 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பல பாடல்களை எழுதி,இயக்கி,தயாரித்து வந்த நடிகர் தனுஷ் இன்றுவரை அவரது பெயருக்கு முன்னாள் எந்த ஒரு அடைமொழியும் வைக்காமல் உள்ளார். சில காலங்களுக்கு முன்பு இளம் சூப்பர் ஸ்டார் என்ற டைட்டிலை தனுஷிற்கு கொடுத்த போது,அதை தான் ஏற்க மாட்டேன் என ஓப்பனாக தனுஷ் பேசினார்.

Also Read : மணிரத்னத்தை விடாமல் துரத்தும் தனுஷ்.. காயப்பட்ட சிங்கம், திருப்பி அடிக்க நாள் குறிச்சாச்சு தலைவரே!

கார்த்தி: நடிகர் சூர்யாவின் தம்பியான நடிகர் கார்த்தி, பருத்தி வீரன் திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி இன்று பொன்னியின் செல்வன் உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட பல திரைப்படங்களில் நடித்துள்ளார். கார்த்தி தற்போது வரை அவர் பெயருக்கு பின்னால் எந்த ஒரு அடைமொழியும் இல்லாமல் தனக்கிருக்கும் ரசிகர்களில் போதுமானது என்று கூறிக் கொண்டு வருகிறார்.

சிவகார்த்திகேயன்: நடிகர் சிவகார்த்திகேயன் மெரினா திரைப்படத்தின் மூலமாக தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமாகி, தற்போது வரை பல திரைப்படங்களில் வெற்றி நாயகனாக நடித்து வருகிறார். இவரின் பெயரை சுருக்கி எஸ்.கே என பலரும் அழைத்து வரும் நிலையில், இன்று வரை அவரது பெயருக்கும் முன்னாள் எந்த ஒரு அடைமொழியும் இல்லை.

விக்ரம் பிரபு: சிவாஜி கணேசனின் பேரனும், நடிகர் பிரபுவின் மகனான நடிகர் விக்ரம் பிரபு கும்கி திரைப்படத்தின் மூலமாக அறிமுகமாகி பல திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் சிவாஜி கணேசனின் பேரன் என்ற அடைமொழியே தனக்கு போதுமானது என்று அவரது பெயருக்கும் முன்னால் எந்த ஒரு அடைமொழியும் வைக்காமல் உள்ளார்.

Also Read: விஜய், அஜித்தால் வருத்தத்தில் கோலிவுட்.. ரஜினி, சிவகார்த்திகேயனால் ஓடுது பொழப்பு!

விஷ்ணு விஷால்: வருடத்திற்கு ஒரு திரைப்படம் மட்டுமே நடித்து வரும் விஷ்ணு விஷால், வெண்ணிலா கபடி குழு திரைப்படத்தின் மூலமாக தமிழில் கதாநாயகனாக அறிமுகமானார். இவரது பெயருக்குப் பின்னாலும் எந்த ஒரு அடைமொழியும் வைக்கவில்லை.

அதர்வா: மறைந்த நடிகர் முரளியின் மகனான நடிகர் அதர்வா, பல திரைப்படங்களில் நடித்து பிரபலமாகி வருகிறார். பானா காத்தாடி திரைப்படத்தின் மூலமாக தமிழில் அறிமுகமான இவருக்கு பெண் ரசிகைகள் அதிகம். அப்படியிருந்த போதிலும் இவருக்குப் பின்னால் எந்த ஒரு அடைமொழியும் வைக்கவில்லை.

விமல்: நடிகர் விமல் தமிழ் சினிமாவில் கிராமப்புற கதாபாத்திரங்களில் அதிகப்படியாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். முக்கியமாக களவாணி திரைப்படத்தில் இவரது நடிப்பு இன்றுவரை அனைவராலும் பாராட்டப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் விமலுக்கு அடைமொழி பெயர் இல்லை .

Also Read : பேராசையில் பொங்கும் சிவகார்த்திகேயன்.. அந்த ஹீரோவை ஜெயிக்கணும்னு செய்யும் தரமற்ற வேலை

Trending News