Heroine change in Sun TV’s main serial: சன் டிவி சீரியலை பொருத்தவரை எந்த நாடகமாக இருந்தாலும் அதை பார்ப்பதற்கு மக்கள் தயாராக இருக்கிறார்கள். ஏனென்றால் குடும்ப இல்லத்தரசிகளின் பொழுதுபோக்கான விஷயமாக சன் டிவி முதல் இடத்தை பிடித்திருக்கிறது. அந்த வகையில் எக்கச்சக்கமான சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
அதில் முக்கிய சீரியலில் கதாநாயகி திடீரென்று வெளியேறப் போகிறார். இவருக்கு பதிலாக ஹிந்தியில் ஒளிபரப்பாகி வந்த சிந்து பைரவி ஹீரோயின் கமிட் ஆகி இருக்கிறார். இப்படி தான் சமீபத்தில் இலக்கியா சீரியலில் இருந்து ஹேமா பிந்து வெளியேறினார். அவருக்கு பதிலாக சாம்பவி குருமூர்த்தி கமிட் ஆகி நடித்து வருகிறார்.
அதற்கு காரணம் மதியம் ஒளிபரப்பாகி வருகிற சீரியலில் பெருசாக மக்களிடம் வரவேற்பு கிடைக்கவில்லை என்பதால். தற்போது அதே மாதிரி இன்னொரு மதிய சீரியலும் எதிர்பார்த்த அளவிற்கு டிஆர்பி ரேட்டிங்கே பிடிக்கவில்லை என்பதால் கதாநாயகி இந்த முடிவை எடுத்திருக்கிறார்.
டிஆர்பி ரேட்டிங்கில் வராததால் எடுத்த முடிவு
அந்த நடிகை வேறு யாருமில்லை மிஸ்டர் மனைவி என்ற சீரியல் மூலம் சன் டிவிக்கு நுழைந்த ஷபானா. இவர் ஏற்கனவே ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வந்த செம்பருத்தி என்ற நாடகத்தின் மூலம் அறிமுகமாகி மக்களுக்கு பிடித்த பேவரட் ஹீரோயினாக தனி இடத்தை பிடித்துக் கொண்டார்.
பைரவியாக நடித்த தேப்ஜானி

அப்படிப்பட்ட இவருக்கு சன் டிவி மூலம் மறுபடியும் பேரும் புகழும் கிடைக்கும் என்று எதிர்பார்ப்புடன் உள்ளே நுழைந்தார். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு வரவேற்பு கிடைக்காததால் இதிலிருந்து விலக இருக்கிறார். மேலும் இவருக்கு பதிலாக பாலிவுட்டில் பிரபலமான மக்களுக்கு மிகவும் பிடித்த சிந்து பைரவி சீரியலில் நடித்த பைரவி தமிழில் முதன் முதலாக எண்டரி கொடுக்கப் போறார்.
இவருடைய உண்மையான பெயர் தேப்ஜானி. இனிமேல் இவர்தான் மிஸ்டர் மனைவி சீரியலில் அஞ்சலியாக நடிக்கப் போகிறார். இவருக்கு ஏற்கனவே ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு இருக்கிறது. அதன் மூலம் இந்த நாடகத்தில் மறுபடியும் ரசிகர்களை கவர போகிறார்.