வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

28 வருடங்களுக்குப் பிறகு கமலுடன் இணையும் ஹீரோயின்.. மும்பையில் ஷங்கர் நடத்திய ரகசிய மீட்டிங்

Kamal and Sankar: கமலின் விக்ரம் படத்திற்குப் பிறகு கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகியும் இன்னும் ஒரு படம் கூட வெளிவரவில்லை. ஆனால் வருகிற படம் சாதனை படைக்கும் அளவிற்கு பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்க வேண்டும் என்று இந்தியன் 2 படத்தை முழுமையாக நம்பி இருக்கிறார்.

அந்த வகையில் ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்தியன் 2 படம் வருகிற ஜூன் மாதம் அனைத்து திரையரங்களிலும் ரிலீஸ் ஆகும் என்று அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டு விட்டார்கள். ஆனாலும் இன்னும் வரை படப்பிடிப்பு முழுமையாக முடிவடையாமல் தான் இருக்கிறது.

இதில் எஸ்ஜே சூர்யா, சித்தார்த், விவேக், நெடுமுடி வேணு, பாபி சிம்ஹா போன்ற நடிப்பு அரக்கர்கள் இணைந்து நடித்திருக்கிறார்கள். இவர்களைத் தொடர்ந்து இன்னும் முக்கிய ஒரு கதாபாத்திரத்தை நடிக்க வைப்பதற்கு ஷங்கர் மும்பையில் ரகசியமாக ஒரு மீட்டிங்கே போட்டிருக்கிறார்.

போற போக்குல சங்கர் எடுத்த முடிவு

அதாவது ஷங்கரின் மூத்த மகள் கல்யாணத்திற்காக மும்பையில் இருக்கும் முக்கிய பிரபலங்களுக்கு பத்திரிக்கை கொடுத்து வருகிறார். அப்படி போற போக்குல பழைய விஷயங்களில் ஆர்வம் காட்டி அதையும் அடுத்த கட்ட வாய்ப்புக்கு பயன்படுத்தி கொள்கிறார்.

அப்படித்தான் 28 வருடங்களுக்கு முன் கமலுடன் இணைந்து நடித்த ஹீரோயினை பார்த்து மறுபடியும் இந்தியன் 2 படத்திற்கு நடிக்க கமிட் பண்ணி இருக்கிறார். அவர் வேறு யாரும் இல்லை சங்கர் இயக்கத்தில் நடித்து ஹிட் கொடுத்த மனிஷா கொய்ராலா தான்.

தற்போது இவரையும் இந்தியன் 2 படத்திலே இணைப்பதற்காக சில முக்கியமான காட்சிகள் இடம் பெறப் போகிறது. அத்துடன் சங்கர் கேட்டதும் எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் மனிஷாவும் அவருடைய கால்ஷீட் கொடுத்து விட்டார். இவர்களுடைய காம்போவில் வந்த முதல்வன் மற்றும் இந்தியன் படம் பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. இதனைத் தொடர்ந்து இந்தியன் 2 படமும் சாதனை படமாக வெற்றி பெற்றுவிடும்.

Trending News