வெள்ளிக்கிழமை, ஜனவரி 10, 2025

+2 பரிட்சை எழுத போன நடிகை.. வெயிட் போட்டதால் துரத்திய தயாரிப்பாளர்

தமிழ் சினிமாவில் இளசுகள் மட்டுமின்றி குடும்ப உறுப்பினர்களின் கவர்ந்த நடிகை அவர். தமிழ் சினிமாவில் மங்கலகரமான நடிகை என்று அனைத்து சென்டர்களிலும் பெயரெடுத்தவர். ஆரம்பத்தில் அம்மணி அடுத்த நயன்தாரா, திரிஷா என்றெல்லாம் பேசப்பட்டார்.

நடிகை அறிமுகமான முதல் படமே மலையாளம் தான். அதன் பின் அங்கே வாய்ப்பு இல்லாததால் தமிழ் பக்கம் வந்த அவருக்கு தமிழில் ஆரம்பமே அசத்தலான படம். முதல் படம் ஹிட் அடித்ததால் பல வாய்ப்புகள் குவிந்த வண்ணம் இருந்தது.

பல வாய்ப்புகள் கதவைத் தட்டினாலும் நடிகை விடாப்படியாக குடும்ப பாங்கான கதைகளை மட்டும் தேர்வு செய்து நடிப்பதில் கில்லாடியாக இருந்தார். அப்படி பல படங்களில் நடித்து வெற்றி பெற்றார். அடுத்த நதியா என்றெல்லாம் பெயர் எடுத்தார்.

நடிக்க வரும்போது பள்ளியில் படித்துக்கொண்டிருக்கும் போதே வந்துவிட்டார் அதனால் பிளஸ் டூ வரை படிக்க வேண்டும் என்ற ஆசையில், அந்த பரீட்சை மட்டும் எழுதிவிடலாம் என்று பள்ளிப்படிப்பை சிறிது காலம் தொடர்ந்தார். அதனால் வீட்டில் நன்றாக கவனிக்கவே சற்று வெயிட் போட்டு பூசணி போல் மாறினார்.
.
இவரை ஏற்கனவே புக்கிங் செய்த தயாரிப்பாளர்கள் எல்லாம் அம்மணியை பார்த்து அரண்டு போயினர். ஹீரோவிற்கு, அக்கா போல் இருப்பதால் சிறிது தயக்கம் காட்டி வேறு ஹீரோயினை புக் செய்ய தொடங்கினர். இதனால் அப்செட் ஆன நடிகை, படம் இல்லாட்டி என்ன படிப்பு இருக்கிறது என்று தெனாவட்டாக திரிந்தார்.

நடிகையை ஒப்பந்தம் செய்த மற்றொரு தயாரிப்பாளரோ இன்னும் படம் ஆரம்பிக்க சிறிது காலம் இருக்கிறது அதனால் மேற்படிப்பு படித்துவிட்டு வாருங்கள் என்று சூசகமாக கூறி அனுப்பியுள்ளார். இப்படியே உடம்பு ஏறி சென்றால் நடிப்பு மட்டுமின்றி கல்யாணத்திற்கும் பிரச்சனையாகிவிடும் என்று அம்மணி இப்பொழுது உடம்பை குறைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.

Trending News