T20 உலகக் கோப்பை, சாம்பியன்ஸ் டிராபி, கோடிகளில் புரளும் இந்திய அணி.. மொத்தத்தையும் மறுத்த ராகுல் டிராவிட்

கடந்த இரண்டு வருடங்களாக இந்திய அணியின் செயல்பாடுகள் மிகவும் வெற்றிகரமாகவே இருக்கிறது. மூன்று விதமான போட்டிகளையும் சுழற்சி முறையில் தான் விளையாடி வருகிறார்கள். ஒவ்வொரு போட்டிகளுக்கும் முக்கியமான சில வீரர்களை மட்டும் தக்கவைத்துக் கொண்டு பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து வருகிறார்கள்.

சமீபத்தில் அவர்கள் 20 ஓவர் உலகக் கோப்பை மற்றும் சாம்பியன்ஸ் டிராபி ஆகிய இரண்டு பெரிய தொடர்களையும் கைப்பற்றி அசத்தினார்கள். இதற்காக அவர்களுக்கு மாபெரும் பரிசுத்தொகையை இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது. கோடிக்கணக்கில் இதில் காசு புரண்டது.

ரோகித் சர்மா தலைமையின் கீழ் 20 ஓவர் உலக கோப்பையை வென்ற இந்திய அணிக்கும், பயிற்சியாளர் தரப்பிற்கும் ஒட்டுமொத்தமாக இந்திய கிரிக்கெட் வாரியம் சுமார் 125 கோடிகளை பரிசுத்தொகையாக ஒதுக்கியது. இந்த அளவிற்கு எந்த ஒரு நாடும் இதற்கு முன்னர் வீரர்களுக்கு வாரி வழங்கியது கிடையாது.

அதை போல் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபியை வென்ற போதும் பரிசு தொகையாக ரூபாய் 50 கோடிகளை கிரிக்கெட் வாரியம் அறிவித்திருந்தது. ஆனால் 20 ஓவர் உலகக் கோப்பையை வெல்லும் போது ராகுல் டிராவிட் தனக்கு அதிக பரிசு தொகை வேண்டாம் என்றும் பயிற்சியாளர்களுக்கு உண்டான தொகையை கொடுங்கள் என வலியுறுத்தினார்.

இப்படி இந்திய அணி சமீப காலமாக நல்ல நிலைமையில் இருந்து வருகிறது. இப்போது கெளதம் கம்பீர் தலைமை பயிற்சியாளராக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார். சாம்பியன்ஸ் கோப்பையை இவர் பயிற்சியாளராக இருக்கும்போது தான் இந்திய அணி வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement Amazon Prime Banner

Leave a Comment