அன்று நெல்சனை அவமானப்படுத்திய மீடியா.. இன்று இறுக்கி அணைச்சு உம்மா கொடுத்த ரஜினி, காரணம் இதுதான்

Director Nelson: இன்று இணையம் முழுக்க பரபரப்பாக பேசப்பட்டு கொண்டிருக்கும் விஷயம் ஜெயிலர் படத்தின் ஆடியோ லான்ச் பங்க்ஷன் தான். ஒட்டுமொத்த சினிமாவின் பார்வையும் ஜெயிலர் மீது விழுந்து இருக்கிறது. நெல்சன் இயக்கத்தில் ரஜினி, சிவராஜ்குமார், மோகன்லால் என எக்கச்சக்க பிரபலங்கள் நடிப்பில் ஜெயிலர் படம் உருவாகி இருக்கிறது.

வருகின்ற ஆகஸ்ட் மாதம் ஜெயிலர் படம் வெளியாக உள்ள நிலையில் நேற்று பிரம்மாண்டமாக இப்படத்தின் ஆடியோ லான்ச் பங்க்ஷன் நடைபெற்றது. இதில் மாஸ் என்ட்ரி கொடுத்த ரஜினி நெல்சனை சூப்பர் ஸ்டார் ஸ்டைலில் இறுக்கி அணைச்சு ஒரு உம்மா கொடுத்து இருந்தார். ஆனால் கடந்த சில மாதங்களுக்கு முன் மீடியாவால் நெல்சன் அவமானப்பட்டு இருந்தார்.

Also Read : பீஸ்ட் மாதிரி நேரத்தில் கோட்டை விட்ட நெல்சன்.. ஜெயிலர் சென்சருக்கு பின் பயத்தில் ரஜினி

அதாவது பீஸ்ட் படத்தின் தோல்வியால் நெல்சனின் பெயர் மிகவும் டேமேஜ் ஆனது. அந்த சமயத்தில்தான் விகடன் விழா ஒன்றுக்கு நெல்சன் சென்ற போது மீடியாக்கள் அவரை கண்டு கொள்ளவே இல்லை. அவர் என்ட்ரி கொடுக்கும் போது உதாசீனப்படுத்திவிட்டு மற்றவர்களிடம் பேட்டி எடுக்க சென்று விட்டனர்.

ஆனால் நெல்சன் அதைப்பற்றி கண்டு கொள்ளவே இல்லை. இந்த சூழலில் இரவு பகல் பாராமல் ஜெயிலர் படத்திற்காக நெல்சன் கடுமையாக உழைத்திருக்கிறார். அது இந்த படத்தின் வீடியோ மற்றும் பாடல்கள் மூலம் ரசிகர்களுக்கு நன்றாக தெரியவந்துள்ளது. அதுவும் ஜெயிலர் ரசிகர்கள் ஏகபோக வரவேற்பு கொடுத்து வருகிறார்கள்.

Also Read : மாலத்தீவுக்கு போயிட்டு வந்தபின் ரஜினிக்கு கிடைத்த மன நிம்மதி.. நெல்சனை கட்டி தழுவ இதுதான் முக்கிய காரணம்

அதுவும் ரஜினி ஒரு படம் வெற்றி பெறுமா என்பதை முன்கூட்டியே கணித்து விடுவாராம். அந்தப் வகையில் ஜெயிலர் படம் வெற்றி என்பது அவர் மனதிற்குள் இருந்தாலும் சென்சார் போர்டில் இருந்து நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்திருக்கிறதாம். இது சூப்பர் ஸ்டாரை உச்சி குளிர் வைத்துள்ளது.

ஆகையால் தான் தனது சந்தோஷத்தை வெளிப்படுத்தும் விதமாக நெல்சனை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து இருக்கிறார். அன்று மீடியாக்களால் நெல்சன் அவமானபட்ட நிலையில் இப்போது சூப்பர் ஸ்டாருடன் அவர் இருக்கும் புகைப்படத்தை வைத்து கொண்டாடி தீர்த்து வருகிறார்கள். அவர்களுக்கு ஜெயிலர் படம் மூலம் சரியான நெத்தியடி பதிலை நெல்சன் கொடுக்க இருக்கிறார்.

Also Read : நீலாம்பரி முன் அசிங்கப்பட்டதை ஒப்புக்கொண்ட ரஜினி.. என்னதான் சொல்லு தலைவருக்கு நிகர் அவர் மட்டும்தான்