Cricketer Natarajan : தமிழகத்தில் சேலம் மாவட்டத்தில் பிறந்தவர் தான் நடராஜன். இவர் 2020 ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியின் மூலம் இந்திய அணி அணி சார்பாக விளையாடினார். இப்போது ஐபிஎல் போட்டி சுவாரசியமாக போய்க் கொண்டிருக்கிறது.
சிறந்த பந்து வீச்சாளரான நடராஜரன் ஐபிஎல் இல் ஹைதராபாத் அணிக்காக விளையாடுகிறார். இந்நிலையில் ஐபிஎல் தொடரின் 35 வது போட்டியில் டெல்லிக்கு எதிராக ஹைதராபாத் அணி மோதி இருந்தது.
இதில் 20 ஓவர்கள் ஹைதராபாத் அணி 266 ரன்கள் எடுத்திருந்தது. மேலும் இதனால் டெல்லி அணிக்கு 267 ரன் இலக்காக அமைந்தது. ஆனால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட வீரர்கள் சொற்ப ரன்களிலேயே அடுத்தடுத்து அவுட்டாகி விட்டனர்.
பந்துவீச்சாளர் நடராஜனுக்கு பரிசு வழங்கிய ஹைதராபாத் அணி
இதனால் ஹைதராபாத் அணியிடம் 67 ரன்கள் வித்யாசத்தில் டெல்லி அணி தோல்வியேற்றது. மேலும் இந்த போட்டியில் ஹைதராபாத் அணியில் டிராவிஸ் ஹெட் 89 ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருதைப் பெற்றார்.
80 பவுன் சங்கிலியில் மின்னும் கிரிக்கெட்டர் நடராஜன்
ஆனாலும் தனது அபாரமான பந்துவீச்சால் 4 விக்கெட்டுகளை வீழ்த்திய நடராஜன் தான் எல்லோருடைய கவனத்தையும் பெற்றிருந்தார். அதிலும் குறிப்பாக ஒரே ஓவரில் மூன்று விக்கெட்டுகளை பெற்றிருந்தார். மேலும் இந்த வெற்றியில் முக்கிய பங்கு ஆக இருந்த நடராஜனுக்கு 80 பவுன் உடைய தங்க சங்கிலியை ஹைதராபாத் அணி பரிசாக வழங்கியிருக்கிறது.
நடராஜன் அந்த சங்கிலி அணிந்து கொண்டு கேக் வெட்டும் புகைப்படம் இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. தங்கம் விக்கிற விலையில் 80 பவுனா என சாமானியர்கள் இதை பார்த்து வாயைப் பிழைக்கின்றனர்.