திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

கமலஹாசனுக்கு ஏற்பட்ட தோல்விக்கு நான்தான் காரணம்.. பகிரங்கமாக ஒப்புக்கொண்ட உதயநிதி

2010 ஆம் ஆண்டு உலகநாயகன் கமலஹாசன், மாதவன், திரிஷா உள்ளிட்டோரின் நடிப்பில் இயக்குநர் கே.எஸ். ரவிக்குமார் மன்மதன் அம்பு திரைப்படத்தை இயக்கினார். இத்திரைப்படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் தயாரித்த நிலையில் படம் சரியாக ஓடவில்லை.

இந்த படத்தின் தோல்வி குறித்து அண்மையில் உதயநிதி ஸ்டாலின் பேட்டியில் பேசினார். அதில் கமலஹாசன் நடிப்பில் ஒரு திரைப்படத்தை தயாரிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். அதற்கேற்றார்போல மன்மதன் அன்பு திரைப்படத்தை தயாரித்தேன். ஆனால் அத்திரைப்படம் சரியாக ஓடாததிற்கு நான் தான் முழு காரணம் என உதயநிதி தெரிவித்தார்.

Also Read : உதயநிதி ஸ்டாலின் ஹீரோவானதற்கு காரணம் இதுதான்.. நட்சத்திர ஹோட்டலில் நடந்த அவமானம்

ஏனென்றால், அத்திரைப்படத்தை இயக்கிய கே.எஸ். ரவிக்குமார் முதலில் தலைவன் இருக்கின்றான் அல்லது வேறு ஏதேனும் ஆக்சன் திரைப்படங்களை இயக்கலாம் என கூறினாராம். ஆனால் உதயநிதி ஸ்டாலின் ஆக்ஷன் திரைப்படங்கள் தற்போது வேண்டாம் கமலஹாசனை வைத்து பஞ்சதந்திரம், பம்மல்.கே. சம்பந்தம் போன்ற காமெடி திரைப்படங்களை போல் இயக்குங்கள் என கே.எஸ்.ரவிகுமாரிடம் தெரிவித்தாராம்.

அதற்கேற்றார்போல கே.எஸ். ரவிக்குமார் திரைப்படத்தை இயக்கிய நிலையில், அந்த படம் படுதோல்வியடைந்தது. இதன் காரணமாக தான் பல நாட்கள் மிகவும் வருந்தியதாகவும், இன்றுவரை கமலஹாசன் போன்ற மிகப் பெரிய நடிகரை இப்படி வச்சு செஞ்சிட்டேன் என நினைத்து தப்பு பண்ணிட்டோமேன்னு உணர்ந்ததாகவும் தெரிவித்தார்.

Also Read : மையத்தை காப்பாற்றியாக வேண்டும்.. ஒரு தலைவனாக கமலஹாசன் எடுத்த அதிரடி முடிவு, அதிரும் எதிர் கட்சிகள்

ஆனால் அந்த கவலையை அண்மையில் வெளியாகி மாஸ் ஹிட்டான விக்ரம் படம் முழுமையாக போக்கியது என்றும் இதை தான் ன் சற்று கூட நினைத்து பார்க்கவில்லை உதயநிதி தெரிவித்தார். மன்மதன் அம்பு திரைப்படத்தில் கொடுத்த தோல்வியை விக்ரம் திரைப்படத்தில் ஈடுகட்டி வெற்றி கொடுத்ததற்கு பின்தான் எனக்கு மகிழ்ச்சியாக இருந்தது என்றும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

மேலும் கமலஹாசன் தற்போது என் படங்களை தயாரிக்கிறார். இது எல்லாம் தனக்கு வியப்பாக உள்ளது என உதயநிதி ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். அண்மையில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் கலகத்தலைவன் திரைப்படம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read : 50 வயதை நெருங்கியும் ஹீரோயினாக நடிக்கும் 4 நடிகைகள்.. இன்றுவரை விடாத கமலஹாசன்

Trending News