ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 5, 2025

சிம்பு மட்டும் இதை செய்தால் அமிதாப் பச்சன் லெவெல்க்கு வருவார்.. மனம் திறந்த கௌதம் வாசுதேவ் மேனன்

இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு நடித்த வெந்து தணிந்த காடு திரைப்படம் தியேட்டரில் ரிலீஸ் ஆகி பட்டையை கிளப்பி கொண்டிருக்கிறது. இந்த படத்தின் ஒரு நாள் வசூல் மட்டுமே எட்டு கோடியை நெருங்கியது. மாநாடு வசூலை பீட் செய்து கொண்டிருக்கிறது இந்த படம்.

இந்த படத்தின் பாசிட்டிவ் ரிவியூக்களை சிம்பு ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். சிம்புவும் நீண்ட நாட்களுக்கு பிறகு நிறைய யூடியூப் சேனல்களுக்கு இன்டர்வியூ கொடுத்து வருகிறார். இயக்குனர் கௌதம் மேனனும் இந்த படத்தை பற்றி நிறைய தகவல்களை பகிர்ந்து வருகிறார்.

Also Read: தளபதியுடன் போட்டி போட்டு தோற்ற சிம்பு.. இதுக்குதான் அப்பவே வேணான்னு சொன்னாங்க

கௌதம் மேனன்-சிம்பு கூட்டணியில் விண்ணைத்தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா படத்திற்கு பிறகு வெந்து தணிந்தது காடு ஹாட்ரிக் படமாக அமைந்து விட்டது. இதில் அச்சம் என்பது மடமையடா படம் மட்டும் எதிர்பார்த்த அளவுக்கு ஓடவில்லை.

இப்போது சிம்புவை பற்றி மனம் திறந்து பேசிய கௌதம் வாசுதேவ் மேனன், சிம்புவுக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் லெவெல்க்கு வர எல்லா சாதகங்களும் இருக்கிறது என்றும், சிம்பு கௌதமுடன் அவருடைய வீட்டில் தங்கியிருந்தாலே தன்னால் சிம்புவை அந்த இடத்திற்கு கொண்டு வர முடியும் என்றும் கூறியிருக்கிறார்.

Also Read: சிம்புவை போல் வம்பில் சிக்கிய நடிகர்.. அடுத்தடுத்த புகாரால் வந்த அவப்பெயர்

சிம்பு கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தயாரிப்பாளர்களிடம் ரெட் கார்டு வாங்கும் அளவிற்கு நடந்து கொண்டார் என்பது அனைவரும் அறிந்ததே. சரியாக சூட்டிங்கிற்கு வராமல் இருப்பது, திடீரென்று படப்பிடிப்பை ரத்து செய்வது என பல அட்ராசிட்டிகளை செய்து வந்தார். உடல் எடையும் அதிகமாக கூடிவிட்டது.

ஆனால் இதிலிருந்து எல்லாம் சிம்பு மீண்டு வந்து ஒரு மிகப்பெரிய கம்பேக் கொண்டு வந்தார். 30 கிலோ எடையை ஒரு வருடத்தில் குறைத்த சிம்பு, வெங்கட் பிரபுவுடன் மீண்டும் இணைந்து மாநாடு என்னும் ஹிட் படத்தை கொடுத்தார். இப்போது வெந்து தணிந்தது காடு படமும் சிம்புவுக்கு ஹிட் கொடுத்து இருக்கிறது.

Also Read: தோல்வி பயத்தை மறைமுகமாக காட்டிய வலிமை, கோப்ரா.. வெற்றிக்காக கௌதம் மேனன் போட்ட பிளான்

Trending News