Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்

வேறு எந்தப் படத்திலும் நடிக்க மாட்டேன் – ‘ஸ்பிரிட்’ இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவிடம் பிரபாஸ் கொடுத்த உறுதி!

வேறு எந்தப் படத்திலும் நடிக்க மாட்டேன் – ‘ஸ்பிரிட்’ இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவிடம் பிரபாஸ் கொடுத்த உறுதி!

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகரான பிரபாஸ், தற்போது இயக்குநர் ஹனு ராகவபுடி இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஃபௌஜி’படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்தப் படத்தைத் தொடர்ந்து,இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் உருவாகவுள்ள ‘ஸ்பிரிட்’படத்தில் பிரபாஸ் நடிக்கவுள்ளார்.இந்தக் கூட்டணி குறித்த அறிவிப்பு வெளியானதில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

இந்நிலையில்,‘ஸ்பிரிட்’படத்தின் பணிகள் தொடர்பாக பிரபாஸ் இயக்குநர் சந்தீப் ரெட்டி வங்காவுக்கு முக்கியமான வாக்குறுதி ஒன்றை அளித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி,தற்போது நடைபெற்று வரும்‘ஃபௌஜி’படத்தின் படப்பிடிப்பை முழுமையாக முடித்த பிறகு, தனது கவனம் முழுவதையும்‘ஸ்பிரிட்’ படத்தின் பணிகளுக்காக ஒதுக்கப் பிரபாஸ் திட்டமிட்டுள்ளார்.

மேலும்,‘ஸ்பிரிட்’படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடையும் வரை வேறு எந்தத் படத்தின் முக்கியப் படப்பிடிப்பிலும் பங்கேற்கப் போவதில்லை என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.இதன் மூலம் சந்தீப் ரெட்டி வங்காவின் இயக்கத்தில் உருவாகும் இப்படத்திற்கு தனது முழுமையான ஒத்துழைப்பையும் கால அவகாசத்தையும் வழங்க பிரபாஸ் தயாராகியுள்ளார் என்பது தெரியவருகிறது.

பிரபாஸ் தனது அடுத்தடுத்த படங்களின் படப்பிடிப்புகளைத் திட்டமிட்டு மேற்கொள்ளும் வகையில் இந்த முடிவை எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக,ஒரு படத்தின் படப்பிடிப்பில் முழுமையாகக் கவனம் செலுத்தும் வகையில் அவர் அளித்துள்ள இந்த வாக்குறுதி‘ஸ்பிரிட்’படக்குழுவினருக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.‘ஃபௌஜி’படப்பிடிப்பு நிறைவடைந்ததும்‘ஸ்பிரிட்’ படத்தின் பணிகளில் பிரபாஸ் முழுமையாக இணையவுள்ளதால், அடுத்தகட்டப் பணிகள் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது.

S

Suriya

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.