திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

நான் நடிக்க மாட்டேன்.. மனைவி, குழந்தைகளுக்காக சிவகார்த்திகேயன் எடுத்த முடிவு

எந்த வித பின்புலமும் இல்லாமல் சினிமாவில் படிப்படியாக முன்னேறிய நடிகர் சிவகார்த்திகேயன், தற்போது நம்ம வீட்டு பிள்ளை என அனைவரும் பாராட்டி வரும் அளவிற்கு வளர்ந்து விட்டார். இவர் சிறு வயதிலிருந்தே அம்மா பிள்ளையாம்.

சிறுவயதிலேயே தந்தையை இழந்த சிவகார்த்திகேயன் அம்மா அரவணைப்பில் வளர்ந்ததால், அம்மாவுக்காக எந்த எல்லை வரை சென்று போராடும் பாசம் கொண்ட மகன். இப்பொழுது தனது மனைவிக்காகவும் குழந்தைகளுக்காகவும் ஒரு முடிவை எடுத்துள்ளார்.

Also Read: காமெடி கலாட்டாவாக வெளிவந்துள்ள சிவகார்த்திகேயனின் பிரின்ஸ்.. அனல் பறக்கும் ட்விட்டர் விமர்சனம்

தேவையில்லாத விளம்பரத்தில் நடிப்பதில்லை என சபதம் எடுத்துள்ளார். அவர் குழந்தைகளுக்கு கேடு விளைவிக்கும் பொருள்களை பயன்படுத்துவது இல்லையாம். அந்தப் பொருள்களின் விளம்பரத்தில் நடிக்க அவருக்கு விருப்பம் கிடையாதாம்.

பொதுவாக அவர் மனைவியை, குழந்தையும் பயன்படுத்தாத மற்றும் கேடு விளைவிக்கும் பொருள்கள் உடைய விளம்பரத்தை நடிக்கமாட்டேன் என்று கூறியுள்ளார். இவரிடம் பல முன்னணி நிறுவனங்களும் அனுப்பிய போதும் பணத்திற்காக கொஞ்சம்கூட மயங்காமல் அவர் எடுத்த முடிவில் உறுதியாக இருக்கிறார்.

Also Read: அஜித், விக்ரமை பார்த்து ஜெர்க்காகி ரூட்டை மாற்றிய சிவகார்த்திகேயன்.. ஹாட்ரிக் வெற்றி பெறுமா பிரின்ஸ்

அதுமட்டுமின்றி இவர் நடிக்கும் படங்களில் காமெடியாகவும் சீரியசாகவும் பல நல்ல கருத்துகளை சொல்ல முயற்சிக்கிறார். அப்படித்தான் இவர் நடிப்பில் 2017 ஆம் ஆண்டு வெளியான படம் வேலைக்காரன்.

இந்த படத்திலும் குழந்தைகள் சாப்பிடும் உணவு பொருட்களில் கலப்படத்தை எப்படி தடுப்பது, எந்தெந்த உணவுகளை குழந்தைகளுக்கு பரிந்துரைக்க கூடாது என்பதையும் ஆணித்தரமாக அடித்துச் சொன்னார்.

Also Read: ஆலமரமாய் வளர்ந்து நிற்கும் சிவகார்த்திகேயன்.. டிஆர்பிக்காக கெஞ்சும் சேனல்

Trending News