சனிக்கிழமை, டிசம்பர் 28, 2024

நான் சிங்கிளா ஜெயிப்பேன், நயன்தாரா எடுத்த அதிரடி முடிவு.. விக்னேஷும் வேண்டாம், ஏகேயும் வேண்டாம்

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா தமிழ் சினிமாவை பொறுத்த வரையில் தற்போது வரை நம்பர் ஒன் இடத்தில் உள்ளார். அதுமட்டுமின்றி தமிழ் நடிகைகளில் அதிக சம்பளம் வாங்கும் பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். மேலும் பாலிவுட்டில் சூப்பர் ஸ்டாரான ஷாருக்கானுக்கு ஜோடியாக ஜவான் படத்தில் நடித்து வருகிறார்.

ஆனால் நயன்தாராவின் கல்யாணத்திற்கு பிறகு அவருக்கு நேரம் சரியில்லை என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால் அதன் பிறகு நயன்தாரா நடிப்பில் வெளியான எந்த படமும் சொல்லிக் கொள்ளும் அளவுக்கு போகவில்லை. கதாநாயகிக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படத்தில் நடித்தாலும் படம் வெற்றி பெறவில்லை.

Also Read : நயன்தாராவால் விக்னேஷ் சிவனுக்கு கிடைத்த 4 படங்கள்.. எவ்வளவு தாஜா பண்ணியும் அஜித்திடம் பழிக்காத ஜம்பம்

அதேபோல் நயன்தாராவின் தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் வெளியாகும் படங்களும் தோல்வியை தழுவி வருகிறது. இதனால் நயன்தாராவுக்கு ஏகப்பட்ட நஷ்டம். இது ஒருபுறம் இருக்க தனது கணவர் விக்னேஷ் சிவனுக்காக அஜித் படத்தின் வாய்ப்பை நயன்தாரா பெற்று தந்தார்.

ஆனால் இப்போது அஜித்தும் நயன்தாராவை கைவிட்டு விட்டார். அதாவது ஏகே 62 படத்தில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்க வேண்டும் என்று விக்னேஷ் சிவனிடம் கூறியதால் ஏகப்பட்ட சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் விக்னேஷ் சிவனை படத்தில் இருந்து தூக்கப்பட்டதாக ஒரு தரப்பு கூறி வருகிறது.

Also Read : நிஜத்திலேயே ரெண்டு இல்ல, படத்துல 2வது இடமா.? கோபத்தில் டாப் ஹீரோவுடன் நடிக்க மறுத்த நயன்தாரா

ஆகையால் விக்னேஷ் சிவனுக்கு அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படங்கள் கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்நிலையில் தற்போது விக்கியும் வேண்டாம், ஏகேவும் வேண்டாம் என்றும் நான் சிங்கிளாகவே ஜெயிப்பேன் என நயன்தாரா அதிரடி முடிவு ஒன்று எடுத்துள்ளார். அதாவது மார்க்கெட்டை தக்க வைத்துக் கொள்ள ஒரு திட்டம் போட்டுள்ளாராம்.

இதற்காக மீண்டும் ஜெயம் ரவி மற்றும் சிவகார்த்திகேயன் போன்ற நடிகர்களின் படங்களில் நயன்தாரா நடிக்க உள்ளாராம். ஏனென்றால் இவர்கள் படம் எப்படியும் ஓடிவிடும் என்ற நம்பிக்கையில் நயன்தாரா ஒப்பந்தம் செய்துள்ளாராம். இதனால் நம்பர் ஒன் இடம் எப்போதுமே நயன்தாராவுக்கு தான் என அவரது ரசிகர்கள் ஆர்ப்பரித்து வருகிறார்கள்.

Also Read : நயன்தாரா கெஞ்சியும் மதிக்காத லைக்கா.. சினிமா வளர்ச்சியில் ஏற்படும் சரிவுக்கு விழும் முதலடி.!

Trending News