திங்கட்கிழமை, ஜனவரி 27, 2025

844 கோடியை இழக்கும் ICC.. பிரபல கிரிக்கெட் வீரர் எச்சரிக்கை.. இதில் இந்தியாவின் முடிவு என்ன?

சர்வதேச கிரிக்கெட்டில் இந்திய அணி முன்னணியில் இருக்கும் நிலையில், அடுத்தாண்டு பாகிஸ்தானில் நடக்கவுள்ள தொடரில் இந்தியா பங்கேற்க வேண்டும் என பாகிஸ்தான் தெரிவித்துள்ளார்.

அடுத்தாண்டு நமது அண்டை நாடான பாகிஸ்தானில் நடக்கவுள்ள சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பாதுகாப்பு பிரச்சனை காரணமாக இந்திய அணி பங்கேற்காது என திட்டவட்டமாக கூறிவிட்டது. ஆனாலும், பாகிஸ்தானும் தொடர்ந்து இந்தியா கட்டாயம் இங்கு வர வேண்டும் நிர்பந்தித்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அணி பாகிஸ்தானுக்கு வரவேண்டும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியமும் தெரிவித்த நிலையில் ஒருவேளை இந்திய அணி அடுத்தாண்டு சாம்பியன் டிராபி தொடரில் விளையாட பாகிஸ்தானுக்கு வரவில்லை என்றால் ஐசிசி மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய நிர்வாகி தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா பங்கேற்கும் ஆனால், இந்தியா பங்கேற்கும் போட்டிகள் ஐக்கிய அமீரகத்தில் நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டது. அதெல்லாம் முடியாது இந்தியாவும் பாகிஸ்தானுக்கு வந்துதான் விளையாட வேண்டும் என்பதில் பாகிஸ்தான் கறாராக உள்ளது.

அப்படி நடந்தால் ரூ.844 கோடி இழப்பு ஏற்படும் – அக்தர் எச்சரிக்கை

இதனால் ஐசிசி அமைப்பு இந்த சாம்பியன்ஸ் டிராபி தொடர் பற்றி இன்னும் இறுதி முடிவு எடுக்காமல் இருக்கும் நிலையில் சாம்பியன்ஸ் டிராபியில் விளையாடவில்லை என்றால் பாகிஸ்தான் மற்றும் ஐசிசி அமைப்பு ரூ.844 கோடி இழப்பை சந்திக்கும் என்று முன்னாள் வீர அக்தர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் வேகப்பந்து சோயிப் அக்தர் கூறியுள்ளதாவது; இந்திய அணியை பாகிஸ்தானுக்கு அழைத்து, அல்லது பொதுவான இடத்திற்கு வரவழைத்துப் போட்டியில் விளையாட வைக்க முடியாமல் போனால் 2 விஷயங்கள் நடக்கும்.ஒன்று, ஸ்பான்சர்ஷிப் மூலம் கிடைக்கும் வருவாயில் போட்டியை நடத்தவுள்ள பாகிஸ்தானுக்கு 844 கோடி இழப்பு ஏற்படும். அடுத்து 2 வது, இந்தியா பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் செய்து, லாகூரில் விளையாடி வென்றாலும் சரி, தோற்றாலும் சரி எது நடந்தாலும் அது நல்லது என்று தெரிவித்துள்ளார்.

சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா தனது முடிவை தெரிவித்துவிட்ட பிறகும் பாகிஸ்தான் இப்படி கட்டாயப்படுத்தி வருவ்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து விரைவில் பிசிசிஐ அமைப்புடன் கலந்து பேசி, ஐசிசி அறிக்கை வெளியிடும் என தெரிகிறது.

Trending News