ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

அந்த நடிகை ஓகே சொன்னா சம்பளம் கூட வேண்டாம்.. அடம்பிடிக்கும் சிவகார்த்திகேயன்!

தமிழ் சினிமாவின் டாப் நடிகர்கள் பட்டியலில் வெகு வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறார் சிவகார்த்திகேயன். படத்துக்கு படம் அவரது வியாபாரம் 2 மடங்கு வளர்ச்சியில் இருக்கிறது என்று சொன்னால் மிகையாகாது. அந்தவகையில் டாக்டர் படத்தைத் தொடர்ந்து அடுத்ததாக டான் திரைப்படம் வருகிற மார்ச் 25ஆம் தேதி வெளியாக உள்ளது.

காலேஜ் கலாட்டா உருவாகியிருக்கும் இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு இப்போதே கூறியுள்ள நிலையில் அடுத்தடுத்து தன்னுடைய படங்களுக்கான வேலைகளை ஆரம்பித்துவிட்டார் சிவகார்த்திகேயன். அந்த வகையில் தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகும் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார்.

மேலும் நீண்ட நாட்களாக கிடப்பில் கிடக்கும் அயலான் திரைப்படமும் விரைவில் மொத்த பணியும் முடிந்து சம்மருக்கு படத்தை கொண்டுவர படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அயலான் படம் கண்டிப்பாக மாபெரும் வெற்றி பெறும் என்பதை இப்போதே கணித்து விட்டனர்.

இப்படி இருக்கையில் சிவகார்த்திகேயன் சினிமாவில் முன்னணி நடிகைகளுடன் ஜோடி போட்டால் தன்னுடைய படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகமாகும் என தன்னுடைய ஆரம்ப காலகட்டங்களில் ஏறிய அதிக சம்பளம் கொடுத்து ஹன்சிகா, நயன்தாரா என அந்தந்த காலகட்டங்களில் முன்னணி நடிகைகளாக வலம் வந்தவர்கள் உடன் ஜோடி போட்டு தன்னுடைய வளர்ச்சிக்கு பயன்படுத்திக் கொண்டார். அது அவருக்கு ஒர்க் அவுட்டும் ஆனது.

அந்தவகையில் தெலுங்கு சினிமாவில் தனக்கென ஒரு தனி இடம் பிடிக்க மிகப்பெரிய ப்ளான் ஒன்றை போட்டுள்ளாராம். இன்றைய தேதிக்கு தெலுங்கு சினிமாவில் இந்த ஒரு நடிகைபெயர் சொன்னா மட்டும் எங்கிருந்து தான் அத்தனை ரசிகர்கள் வருவார்கள் என்றே தெரியவில்லை. முன்னணி நடிகர்களுக்கு இணையாக இந்த நடிகைக்கு ரசிகர் பட்டாளம் உள்ளது.

அவர் வேறு யாரும் இல்லை, நம்ம ஊரில் இருந்து சென்று அக்கட தேசத்தில் பட்டையை கிளப்பிகொண்டிருக்கும் நம்ம சாய்பல்லவி தான். சிவகார்த்திகேயன் எப்படியாவது சாய்பல்லவியுடன் இணைந்து ஒரு படம் நடித்து விட வேண்டும் என்பதில் குறிக்கோளாக இருக்கிறாராம். அப்படி சாய் பல்லவி தனக்கு ஜோடி ஆகிவிட்டால் தன்னுடைய சம்பளத்தை கூட விட்டுக்கொடுக்க தயாராக இருக்கிறாராம்.

சின்ன மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிக்கும் கதையாக சாய்பல்லவியை வைத்து தெலுங்கு சினிமாவில் தன்னுடைய மார்க்கெட்டை உயர்த்த பிளான் போட்டுள்ளார் என இப்போதே மூக்கின் மேல் விரல் வைத்து பார்த்துக் கொண்டிருக்கிறதாம் சினிமா வட்டாரம்.

Trending News