ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

நீங்க சூப்பர் ஸ்டாரா இல்லனா கம்பி எண்ணிட்டு இருந்திருப்பீங்க.. பிரபல நடிகரை நச்சுனு கண்டித்த உயர்நீதிமன்றம்

மலையாள சூப்பர் ஸ்டாரான நடிகர் தற்போது வரை நூற்றுக்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து அசத்தியவர். இந்த வருடத்தில் இவர் நடிப்பில் மலையாளத்தில் வெளியான மான்ஸ்டர், 12த்மேன், புரோ டேடி உள்ளிட்ட படங்கள் நல்ல வரவேற்பை பெற்றது. இதனிடையே சமீபத்தில் அவரை கேரள உயர்நீதிமன்றம் வன்மையாக கண்டித்த செய்தி வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

2012ஆம் ஆண்டு வருமான வரித்துறையினர் கேரளாவில் உள்ள மோகன்லாலின் வீட்டில் சோதனை மேற்கொண்டனர். அப்போது மலையாள சூப்பர் ஸ்டாரான மோகன்லாலின் வீட்டில் நான்கு யானை தந்தங்கள் இருந்ததை கண்டறிந்தனர். இதன்காரணமாக வனத்துறையினர் மோகன்லாலின் மீது வழக்குத் தொடுத்தனர். பெரும்பாவூர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்த நிலையில் மோகன்லால் இந்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு கேரள அரசிடம் உதவி நாடினார்.

Also Read : உதவி இயக்குனரை ஏமாற்றிய முருகதாஸ்.. பழைய பகைக்கு பழி தீர்த்துக் கொண்ட நயன்தாரா

மேலும் கேரள அரசின் தரப்பில் மோகன்லால் வீட்டில் வளர்க்கப்பட்டு உயிரிழந்த யானைகளின் தந்தங்கள் அவர் வீட்டில் வைக்கப்பட்டது என விளக்கம் அளிக்கபட்டது. இதனிடையே இந்த மனுவை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம் மனுவை தள்ளுபடி செய்த நிலையில், மோகன்லாலை எச்சரிக்கும் வகையில் வன்மையாக கண்டித்துள்ளனர். அதில் இதுவே நீங்கள் சாதாரண மனிதனாக இருந்திருந்தால் இந்நேரம் சிறையில் கம்பி எண்ணும் நிலைக்கு நீங்கள் தள்ளப்பட்டு இருப்பீர்கள். .

சாதாரண மனிதனாக நீங்கள் இருந்திருந்தால், இந்நேரம் கேரள அரசு உங்கள் பக்கம் துணை நின்றிருக்குமா என்ற கேள்விகளும் எழுப்பப்பட்டது. ஒரு சாமானியனுக்கு அரசு இவ்வளவு தளர்வுகள் அளிக்குமா எனவும் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது. நீதிமன்றம் இவ்வளவு வன்மையாக மோகன்லாலை கண்டித்தது அவரையும் அவரது ரசிகர்களையும் பேரதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Also Read : திருமணத்திற்கு பிறகு தத்தளிக்கும் நயன்தாராவின் மார்க்கெட்.. சோலியை முடித்துவிட்ட 2 படங்கள்

நீதிமன்றத்தின் இந்த கண்டனத்தை கேட்ட பலரும், மோகன்லால் தனது தவறை மறைப்பதற்காகவே கேரள அரசை அணுகி தனது செல்வாக்கை பயன்படுத்தி இவ்வழக்கில் இருந்து தப்பித்துக் கொண்டார் என பலரும் தற்போது பேசி வருகின்றனர். இருந்தாலும் ஒரு நடிகர் என்ற காரணத்தினால் மட்டுமே இப்படி ஒரு செயலை மோகன்லால் செய்துள்ளது தவறு என்றும் பலரும் தெரிவித்து வருகின்றனர்.

விலையுயர்ந்த யானை தந்தங்களை எடுப்பதற்காக பல யானைகள் கொல்லப்படும் அவலம் நடந்து வரும் நிலையில் மோகன்லால் யானைகளின் தந்தங்களை சட்டத்திற்கு புறம்பாக தனது வீட்டிலேயே வைத்து வந்துள்ளது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. தனது 62 வயதிலும் மோகன்லால் பல திரைப்படங்களில் ஓயாமல் நடித்து வரும் நிலையில் இதுபோன்று சட்டத்திற்கு புறம்பான வழக்குகளில் சிக்கி சர்ச்சையை உண்டாக்கியுள்ளார்.

Also Read : பாப் கட்டிங், ட்ரெண்டாகும் நயன்தாராவின் பள்ளிப்பருவ புகைப்படம்.. அழகுல மயங்கி விக்னேஷ் சிவன்

Trending News