Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்

83 வயதில் மீண்டும் பிஸியாகும் இசைஞானி இளையராஜா!

83 வயதில் மீண்டும் பிஸியாகும் இசைஞானி இளையராஜா!

டோரதி மற்றும் லெனின் பாண்டியன் படங்களுக்குப் பிறகு தொடர்ந்து பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார் இசைஞானி இளையராஜா.

இயக்குநர் அமீரின் உதவியாளர் ராம் இயக்கத்தில் உருவாகும் இன்னும் பெயரிடப்படாத படத்தின் படப்பிடிப்பு தற்போது கோவையில் நடைபெற்று வருகிறது.

மேலும், ராமராஜன் நடிக்கும் ‘கடவுள் தந்த பரிசு’ படத்திற்காக ஒரே நாளில் ஆறு பாடல்களுக்கும் இசையமைத்து விட்டதாக ராமராஜனே தெரிவித்துள்ளார்.

மாரி செல்வராஜின் ‘மஞ்சனத்தி’ மற்றும் ஆர். பால்கியின் ‘தட்டுவண்டி’ ஆகிய படங்களுக்கும் அவர் இசையமைத்து வருகிறார்.

இதனிடையே, ‘சூப்பர் டீலக்ஸ்’ படத்திற்குப் பிறகு விஜய் சேதுபதி – தியாகராஜன் குமாரராஜா கூட்டணியில் உருவாகும் ‘பாக்கெட் நாவல்’ படத்திலிருந்து இளையராஜா விலகிவிட்டதாகவும் ஒரு பேச்சு கோலிவுட் வட்டாரங்களில் பரவி வருகிறது. இருப்பினும், இதுகுறித்து படக்குழு இதுவரை எந்த உறுதியான தகவலையும் வெளியிடவில்லை.

விஷாலின் ‘துப்பறிவாளன் 2’, ‘கடவுளின் செல்லும் வழி’ என கோலிவுட்டில் படு பிஸியான இசையமைப்பாளராக இளையராஜா வலம் வருவதைக் கண்டு அவரது ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

V

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.