வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

இளையராஜா இசை அமைக்காத ஒரே நடிகரின் படம்.. 40 வருட சினிமா வாழ்க்கையில் நிகழ்ந்த ஆச்சரியம்

1976 ஆம் ஆண்டு அன்னக்கிளி திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இளையராஜா. இதுவரை 1000 பாடல்களுக்கு மேல் இசையமைத்து இருக்கிறார். தமிழ், தெலுங்கு, கன்னடம் , மலையாளம், ஹிந்தி என தென்னிந்திய சினிமாவில் முடிசூடா மன்னனாக இருக்கிறார். இவருக்கு பத்மபூஷன், பத்மவிபூஷன் போன்ற உயரிய விருதுகள் கிடைத்திருக்கின்றன.

கண்ணதாசன், வாலி, வைரமுத்து, ஓ. என். வி. குறுப்பு, சிறீகுமாரன் தம்பி, வெட்டூரி சுந்தரராம மூர்த்தி, ஆச்சார்யா ஆட்டாரியா, சிறிவெண்ணிலா சீதாராம சாஸ்த்ரி, சி. உதய சங்கர் மற்றும் குல்சார் போன்ற பாடலாசிரியர்களுடன் பணியாற்றி இருக்கிறார். மேலும் பாரதிராஜா, எஸ். பி. முத்துராமன், மகேந்திரன், பாலு மகேந்திரா, கே. பாலச்சந்தர், மணிரத்னம், சத்யன் அந்திக்காடு, பிரியதர்சன், ஃபாசில், வம்சி, கே. விஸ்வநாத், சிங்கீதம் சீனிவாசராவ், பாலா, சங்கர் நாக், மற்றும் ஆர். பால்கி என எல்லா இந்திய இயக்குனர்களுடன் பணியாற்றி இருக்கிறார்.

Also Read: இளையராஜா அதிகமாக இசையமைத்தது இவர் படத்துக்கு தான்.. ரஜினியை மட்டும் தவிர்த்த இசைஞானி

இசைஞானி, மேஸ்ட்ரோ என அழைக்கப்படும் இளையராஜா, தமிழ் சினிமாவை தன் கைக்குள் வைத்திருந்தார் என்றே சொல்லலாம். ஹீரோக்களின் கால்ஷீட்டுகள் கூட கிடைத்து விடும். ஆனால் இளையராஜாவின் கால்ஷீட் கிடைப்பது ரொம்பவே கஷ்டம். 1986ல் முதன் முதலில் தமிழ் திரைப்பட பாடலை கணினி மூலம் பதிவு செய்து சாதனை படைத்தார். இந்த சாதனையை அவர் செய்த படம் கமல் நடித்த விக்ரம்.

இப்படி ஆல்ரவுண்டராக இருந்த இசைஞானி தன்னுடைய 40 ஆண்டு கால சினிமா வாழ்க்கையில் ஒரு நடிகரின் படத்தில் மட்டும் இசையமைக்கவில்லை என்றால் நம்ப முடிகிறதா. ஆம் இளையராஜா தன்னுடைய இத்தனையாண்டு சினிமா வாழ்க்கையில் அப்போதைய வெற்றி இயக்குனராக தமிழ் சினிமாவில் வளர்ந்து வந்த டி.ராஜேந்தருடன் மட்டும் சேர்ந்து பணிபுரியவே இல்லை.

Also Read: பாடலை மட்டுமே வைத்து ஹிட்டித்த ராமராஜனின் 4 படங்கள்.. இளையராஜா வளர்த்துவிட்ட ஹீரோ

1980 ஆம் ஆண்டு ஒரு தலை ராகம் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் தான் டி.ராஜேந்தர். தன்னுடைய அடுக்கு மொழி வசனங்களால் மக்களிடையே பிரபலமடைந்த இவர் படங்களை எழுதி, இயக்கி, நடிப்பதோடு மட்டுமின்றி பாடல் வரிகளையும் எழுதி வந்தார். இவர் தான் இயக்கி நடித்த முதல் 26 படங்களுக்கும் இவரே இசையமைத்து இருக்கிறார்.

இவர் கடைசியாக இயக்கி நடித்த வீராசாமி படத்திற்கு கூட இவரே தான் இசையமைத்து இருக்கிறார். இப்படி கதை எழுதுவது, இயக்குவது, பாடல் இசைப்பது, பாடல் எழுதுவது என எல்லாத்தையும் இவரே செய்ததால், மற்ற இசையமைப்பாளர்களுடன் சேர்ந்து பணிபுரியவே இல்லை. இதனால் தான் இவர்கள் இருவரும் சேர்ந்து பணியாற்றவே இல்லை.

Also Read: மதிக்காத இளையராஜாவிடம் பாக்யராஜ் பண்ணிய தாஜா.. உச்சகட்ட பொறாமையில் இசை ஞானி

Trending News