சனிக்கிழமை, டிசம்பர் 21, 2024

5 இந்திய கிரிக்கெட் வீரர்களை கம்பி என்ன வைத்த போலீஸ்.. மாமியார் வீட்டு கேப்ப கலியை அதிக நாள் ருசித்த சித்து

Imprisoned 5 Indian players:  சட்டம் எல்லோருக்கும் ஒன்றுதான், நீங்கள் யாராக இருந்தாலும் பரவாயில்லை என இந்திய போலீஸ் ஐந்து பிரபலமான கிரிக்கெட் வீரர்களை தூக்கி கம்பிக்கு பின்னால் வைத்து விருந்து கொடுத்துள்ளது. அவர்கள் செய்த குற்றத்தையும், அவர்கள் எத்தனை நாட்கள் சிறைவாசம் அனுபவித்தார்கள் என்பதையும் இதில் பார்க்கலாம்

வினோத் காம்ளி: சச்சினின் நெருங்கிய நண்பர் இவர். காம்ளி தனது வீட்டில் வேலை செய்யும் சோனி என்ற பொண்ணுக்கு சம்பளம் கொடுக்காமல் மூன்று நாட்கள் வீட்டில் அடைத்து சித்திரவதை செய்துள்ளார். அந்தப் பெண் புகார் அளிக்கவே வினோத் காம்ப்ளி மீது எஃப் ஐ ஆர் போடப்பட்டு 10 நாட்கள் சிறையில் தூக்கி வைக்கப்பட்டார்.

அமித் மிஸ்ரா: பெங்களூரில் இவர் தங்கியிருந்த ஹோட்டலில் வேலை செய்யும் பெண்ணிடம் தவறாக நடந்து, அவரை அடித்தும் விட்டார் என்று இவர் மீது அந்தப் பெண் பெங்களூரு, அசோக் நகர் போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன்ட் செய்தார். இவரை அரெஸ்ட் செய்த போலீஸ் இவரை இரண்டு நாட்கள் கம்பி என்ன வைத்து அதன் பின் பெயிலில் விட்டது.

Also Read: வெளிவந்தது இந்திய கிரிக்கெட் வீரர்கள் வாங்கும் சம்பளம்.. பிசிசிஐ கான்ட்ராக்ட்டை இழந்த 2 முக்கிய வீரர்கள்

சுரேஷ் ரெய்னா: அதிகாலை 3 மணி அளவில் மும்பை விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார் சுரேஷ் ரெய்னா. கொரோனா காலத்தில் அரசு உத்தரவின்படி விதிகளை பின்பற்றாமல் ஊர் சுற்றியதால் இவர் கைது செய்யப்பட்டு பின்னர் உடனே விடுவிக்கப்பட்டார்.இவர் ஒரு நாள் காவலர்கள் கட்டுப்பாட்டில் இருந்துள்ளார்.

ஸ்ரீசாந்த்: 2013 ஐபிஎல் போட்டிகளில் ஸ்பாட் பிக்சிங் மற்றும் பெட்டிங் கேசில் ஸ்ரீசாந்தை அரெஸ்ட் செய்தார்கள் காவல்துறையினர். ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடிக் கொண்டிருந்த இவர் கிட்டத்தட்ட ஒரு மாத காலம் திகார் ஜெயிலில் கேப்பகலி தின்று பின் வெளிவந்தார்.

நவ்ஜத் சிங் சித்து: ஆரம்பத்தில் இருந்தே 80ஸ் கிட்ஸ்களுக்கு இவர் ஒரு கோவக்காரர், ஒருமுறை ஸ்டம்பை புடுங்கி அம்பயரை குத்தி விட்டார் என்றெல்லாம் பயம் காட்டி வளர்த்து விட்டனர். ஆனால் மனுஷன் மிகவும் சாது. இவரை பாட்டியாலா ஜெயிலில் ஒரு வருஷம் கேப்ப கலி திங்க வைத்திருக்கின்றனர். முதியவர் ஒருவரை ரோடு ஆக்ஸிடென்டில் கொன்று விட்டார்.

Also Read: சூதாட்ட புகாரில் சிக்கி, இந்திய கிரிக்கெட் அணியின் மானத்தை வாங்கிய 5 நட்சத்திர வீரர்கள்

Trending News