Cinemapettai
தமிழ் சினிமா மற்றும் செய்திகளின் தினசரி அப்டேட்ஸ்

டிஜிட்டல் பிராஸ்டியூஷனுக்கு ஆதரவா? பெண் சுதந்திரம் குறித்து அனிதா சம்பத் சரமாரி கேள்விகள்!

டிஜிட்டல் பிராஸ்டியூஷனுக்கு ஆதரவா? பெண் சுதந்திரம் குறித்து அனிதா சம்பத் சரமாரி கேள்விகள்!

‘தமிழா தமிழா’நிகழ்ச்சியில் டிஜிட்டல் ப்ரோஸ்டியூஷன் (Digital Prostitution) குறித்து பெண் ஒருவர் பேசிய கருத்துகள் தற்போது சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன.குறிப்பாக,இதனை தனிப்பட்ட சுதந்திரமாகவும்,பணம் சம்பாதிப்பதற்கான ஒரு தொழிலாகவும் பார்க்க வேண்டும் என்ற கருத்துக்கு எதிராக நடிகையும் தொகுப்பாளருமான அனிதா சம்பத் தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் காட்டமான கேள்விகளை முன்வைத்துள்ளார்.


அந்த நிகழ்ச்சியில் பெண் ஒருவர் டிஜிட்டல் பாலியல் தொழிலை ஆதரித்துப் பேசியதற்கு தனது அதிருப்தியை வெளிப்படுத்திய அனிதா சம்பத், ஆடை சுதந்திரத்தையும் சப்ஸ்கிரைப் அடிப்படையில் இயங்கும் இதுபோன்ற தளங்களையும் எப்படி கனெக்ட் பண்ண முடியும் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.மேலும்,இதுவும் ஒரு பிசினெஸ்தான் என்றால் பெண்கள் ஏன் பள்ளி,கல்லூரிகளுக்குச் சென்று படிக்க வேண்டும்?என்றும் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.


மாதம் 7,000 சம்பளத்திற்காகப் பெண்கள் ஏன் உழைத்து குடும்பத்தைக் காப்பாற்ற வேண்டும்?3,000 சம்பளத்திற்கு ஏன் வீட்டு வேலை செய்ய வேண்டும்? மாதவிடாய் மற்றும் ஹார்மோன் பிரச்சினைகளையும் எதிர்கொண்டு பெண்கள் ஏன் போட்டித் தேர்வுகளுக்குப் படிக்க வேண்டும்? என அடுத்தடுத்த கேள்விகளை எழுப்பியுள்ளார்.


மேலும்,தாய்லாந்தில் பாலியல் தொழிலுக்கான தேவை அதிகமாக இருப்பதைச் சுட்டிக்காட்டி,அதனால் என்ன?குடும்பத்திற்காக வேலைக்குச் செல்வதைப் பெண்கள் கைவிட வேண்டுமா? என்றும் கேள்வி எழுப்பியுள்ளார்.அனிதா சம்பத்தின் இந்தப் பதிவு,தனிப்பட்ட சுதந்திரம், பெண்களின் பொருளாதார முன்னேற்றம் மற்றும் டிஜிட்டல் தளங்களில் வருமானம் ஈட்டுவது குறித்த விவாதத்தை மீண்டும் சமூக வலைதளங்களில் கவனத்திற்கு கொண்டு வந்துள்ளது.

S

Suriya

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.