புதன்கிழமை, டிசம்பர் 25, 2024

90களில் அடுத்த கமல் என்று சொல்லப்பட்ட 3 ஹீரோக்கள்.. பெயரை கெடுத்து ரேஸில் இருந்து விலகிய நடிகர்

உலகநாயகன் கமலஹாசன் தற்போது 25 வருடங்களுக்கு முன்பு ஷங்கர் இயக்கத்தில் சூப்பர் ஹிட் அடித்த இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இதன் படப்பிடிப்பு தற்போது திருப்பதியில் பிரம்மாண்டமான செட் அமைக்கப்பட்டு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது.

இந்த சூழலில் 90களில் அடுத்த கமலஹாசனாக மாற போட்டி போட்ட மூன்று நடிகர்களைப் பற்றிய தகவல் வெளியாகி உள்ளது. இதில் ஒருவர் புகழின் உச்சத்துக்கு சென்றாலும் ஒரு சில விஷயத்தில் கிசுகிசுக்கப்பட்டு தன்னுடைய பெயரை கெடுத்து ரேஸிலிருந்து வெளியேறி உள்ளார்.

Also Read: பிரம்மாண்டத்திற்கு ஆசைப்பட்ட கார்த்திக்.. மிஞ்சியது என்னமோ அவமானம் மட்டும் தான்

கார்த்திக்: நவரச நாயகனாக ரசிகர்களால் கொண்டாடப்பட்ட கார்த்திக், 1981 ஆம் ஆண்டு பாரதிராஜா இயக்கத்தில் வெளியான அலைகள் ஓய்வதில்லை படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி அதன் பின் டாப் ஹீரோவாக தமிழிலும் தெலுங்கிலும் ஒரு ரவுண்டு கட்டிக் கொண்டிருந்தார். இருப்பினும் இவர் உடன் நடிக்கும் நடிகைகளுடன் கிசுகிசுக்கப்பட்டதுடன், தன்னுடைய முதல் மனைவி ராகினியை திருமணம் செய்து கொண்ட பின் அவருடைய சகோதரி ரதியையும் இரண்டாவது திருமணம் செய்து கொண்டது பெரிதும் விமர்சிக்கப்பட்டது. இதனால் ரசிகர்களிடம் இவருக்கு இருந்த பெயரை அவரே கெடுத்துக்கொண்டு சினிமாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்கி விட்டார்.

பிரசாந்த்: பிரபல இயக்குனர் தியாகராஜன் அவர்களின் மகனாக சினிமாவில் மிக சுலபமாகவே நுழைந்து விட்டார். இவர் 1990ல் வைகாசி பொறந்தாச்சு என்ற படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமாகி, அதன் பின் செம்பருத்தி, ஜீன்ஸ், ஜோடி, வின்னர் போன்ற பல சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தார். இவருடைய நடிப்பு மற்றும் நடனத்தால் ரசிகர்கள் பலரும் இவரை அடுத்த கமல் என்றும் வாயார மெச்சி பேசினார்கள்.

Also Read: பிரசாந்தின் சினிமா வாழ்க்கையை புரட்டி போட்ட 6 படங்கள்.. அதிலும் ஷங்கர் டைரக்ஷன் செம மாஸ்

ஜெயராம்: மலையாள நடிகரான இவர் தமிழில் நிறைய படங்கள் நடித்து பல நடிகர்களை ஓரம் கட்டினார். 90களில் தமிழ் நடிகைகளுடன் ஜோடி சேர்ந்த ஜெயராம் அடுத்த கமல் ஆக கோலிவுட்டில் வலம் வந்தார்.

இவ்வாறு இந்த மூன்று நடிகர்களும் 90களில் அடுத்த கமல் என சொல்லப்பட்டனர். அதிலும் நவரச நாயகன் கார்த்திக் புகழின் உச்சத்திற்கு செல்லும் போது தன்னுடைய பெயரை கெடுத்துக் கொண்டது, அவர் சினிமாவில் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக ஒதுங்குவதற்கு காரணமாக அமைந்தது.

Also Read: நடிகையின் வெறுப்பை சம்பாதித்த கமல்.. கலாச்சாரத்தை கெடுத்து 80-களில் போட்ட ஆட்டம்

Trending News