வியாழக்கிழமை, ஜனவரி 23, 2025

இந்தியா, இங்கிலாந்து சென்னை போட்டிக்கு டிக்கெட் எவ்வளவு? எப்படி வாங்குவது.. ரசிகர்களுக்கு பாய்ந்த கண்டிஷன்

இங்கிலாந்து அணி இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஐந்து 20 ஓவர் போட்டி மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட. உள்ளது.ஏற்கனவே நேற்று நடைபெற்ற முதல் போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது. இந்த போட்டி கொல்கத்தாவில் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது.

11 பேருக்கும் பேட்டிங் தெரியும் என இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் கூறியிருந்தார், ஆனால் இந்திய பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தினார்கள். வெறும் 132 ரன்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்தது இங்கிலாந்த அணி. இந்தியா 12.5 ஓவர்களில் ஏழு விக்கெட் வித்தியாசத்தில் எளிதாக வென்றது.

இரண்டாவது 20 ஓவர் போட்டி சென்னையில் நடைபெறுகிறது. சேப்பாக்கம் மைதானத்தில் வருகிற 25ஆம் தேதி சனிக்கிழமை இரு அணிகளும் மோதுகிறது. இப்பொழுது இந்த போட்டிக்கான டிக்கெட்டுகளை வாங்குவதற்கு ரசிகர்கள் அலை மோதி கொண்டிருக்கிறார்கள்.

District by Zomato என்ற மொபைல் செயலிலும், இணையதளத்திலும் இந்த திட்டத்தை பெற்றுக் கொள்ளலாம். இந்த போட்டிக்கான குறைந்தபட்ச டிக்கெட்1200 ரூபாயிலிருந்து 12000 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இன்றிலிருந்து இந்த டிக்கெட்டை பெற்றுக் கொள்ளலாம்.

சேப்பாக் மைதானத்தில் போட்டியை பார்ப்பதற்கும் ரசிகர்களுக்கு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மொபைலைத் தவிர டிஜிட்டல் கேமரா, லேப்டாப் போன்ற மின்சாதன பொருட்கள் எதையும் உடனெடுத்து செல்லக்கூடாது. அதை போல் ஹெல்மெட், பை, குடை, ஸ்னாக்ஸ் போன்றவற்றை எடுத்துச் செல்வதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. குடிதண்ணீர் வசதிகள் மட்டும் மைதானத்தில் இருக்குமாம்.

Trending News