திங்கட்கிழமை, டிசம்பர் 23, 2024

சேனாபதி கெத்தை சல்லி சல்லியா நொறுக்கிய அனிருத்.. இந்தியன் 2 பரிதாபங்கள்

Indian 2-Aniruth: மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்த இந்தியன் 2 இப்போது பரிதாப நிலைக்கு ஆளாகி இருக்கிறது. நேற்று ரஜினி உட்பட பல முன்னணி ஜாம்பவான்கள் அதன் இன்ட்ரோ வீடியோவை வெளியிட்டு இருந்தனர். இதுவே பெரும் ஆர்வத்தை தூண்டி இருந்தது.

ஆனால் வீடியோவை பார்த்த பலரும் அழாத குறையாக இப்போது புலம்பி வருகின்றனர். இதற்கு காரணம் அனிருத் தான். முந்தைய பாகத்தில் ஏ ஆர் ரகுமானின் இசை படத்திற்கு யானை பலம் போல் இருந்தது. ஆனால் அனிருத் அதில் பாதியைக் கூட கொடுக்கவில்லை என்பதுதான் கமல் ரசிகர்களின் ஆதங்கமாக உள்ளது.

அதனாலேயே தற்போது இந்த இன்ட்ரோ வீடியோவுக்கு எதிர்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை. அதற்கு பதிலாக அனிருத்தை தான் ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். எந்த மாதிரி ஒரு படம் கைக்கு கிடைத்திருக்கிறது அதை இப்படி வேஸ்ட் செய்யலாமா என்று சோசியல் மீடியாவில் கருத்துக்கள் கிளம்பி வருகிறது.

Also read: விடாது கருப்பு போல் ஆண்டவரை பிடித்த இந்தியன் 2.. சொல்ல முடியாமல் தவிக்கும் இயக்குனர்

மேலும் காட்சிகளில் கூட நம்மை புல்லரிக்க வைக்கும் வகையில் எந்த சம்பவமும் இல்லை. இருப்பினும் கொரோனா காலத்தில் நடந்த சில அலப்பறைகளும் அதில் காட்டப்பட்டிருக்கிறது. இதை வைத்து பார்க்கும் போது அரசியல் உள்குத்து கண்டிப்பாக இருக்கும் என்று தெரிகிறது. ஆனாலும் ஏதோ ஒன்று குறைகிற உணர்வு தோன்றுவதை நம்மால் தடுக்க முடியவில்லை.

ஏனென்றால் பிஜிஎம் மிரட்டலாக இருந்தால் இவை அனைத்தும் சரி செய்யப்பட்டிருக்கும். அதை செய்ய தவறிய அனிருத்தை ரசிகர்கள் இப்போது ரோஸ்ட் செய்து வருகின்றனர். தற்போது வீடியோவுக்கு கிடைத்த சில நெகட்டிவ் விமர்சனங்களை பார்த்த படக்குழுவும் அடுத்த கட்ட ஆலோசனையில் இறங்கி உள்ளதாம்.

அதைத்தொடர்ந்து டீசர், ட்ரைலர் உள்ளிட்ட விஷயங்களில் கூடுதல் கவனம் செலுத்தி சில விஷயங்களை மாற்றவும் அவர்கள் பிளான் செய்து வருகிறார்கள். ஆக மொத்தம் அனிருத்தால் சேனாபதியின் கெத்து சல்லி சல்லியாக நொறுக்கப்பட்டிருக்கிறது. இருந்தாலும் கமல் அதை எல்லாம் சரி செய்து விடுவார் என்பதில் சந்தேகம் இல்லை.

Also read: இந்தியனுக்கு சாவே கிடையாது.. மிரட்டும் சேனாபதி, ரஜினி வெளியிட்ட இந்தியன் 2 வீடியோ எப்படி இருக்கு?

Trending News