ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 12, 2025

4 ஜாம்பவான்களை இழந்து ரெடியான இந்தியன் 2.. ஒரிஜினல் குணசேகரன் இல்லாததால் செத்துப்போன டிஆர்பி

Indian 2 Movie: இந்தா வருது அந்தா வருதுன்னு கிட்டத்தட்ட அஞ்சு வருஷமாக இந்தியன் படத்தின் இரண்டாம் பாகத்தை சங்கர் எடுத்து வருகிறார். ஆனால் இன்னும் முடிந்த பாடாக இல்லை. காரணம் 3 மணி நேர ஸ்டோரிக்கு 6 மணி நேரமாக பார்க்கும் அளவிற்கு கதையை எடுத்து வைத்திருக்கிறார். அதனால் என்ன பண்ணுவது என்று தெரியாமல் மொத்த பட குழுவும் முழித்துக் கொண்டு வருகிறார்கள்.

இதனை அடுத்து இந்தியன் 2 அறிமுக வீடியோவை ரஜினிகாந்த், மோகன்லால், அமீர்கான், கிச்சா சுதீப் மற்றும் எஸ்எஸ் ராஜமவுலி ஆகியோர் வெளியிட்டார்கள். இந்த அறிமுக வீடியோவை பார்த்த பொழுது இதில் இறந்து போன நான்கு பிரபலங்களை நமக்கு ஞாபகப்படுத்துகிறது. அதில் விவேக், மனோபாலா, நெடுமுடி வேணு மற்றும் மாரிமுத்து ஆகிய நான்கு பழம்பெரும் நடிகர்கள்.

இவர்கள் கடைசியாக நடித்த படம் இந்தியன் 2 தான். அந்த வகையில் அடுத்தடுத்து இவர்கள் இறந்து போனது இந்தியன் 2 படத்திற்கே கிடைத்த சாபமாக தான் இருக்கிறது. ஏற்கனவே படத்தை சரியாக முடிக்க முடியாமல் போராடிக் கொண்டு வருகிறது. இதில் இந்த ஒரு அசம்பாவிதம் வேற நடந்து நான்கு பிரபலங்களை காவு வாங்கி இருக்கிறது.

Also read: இந்தியன் 2 ஆல் தலையில் விழுந்த இடி.. அடுத்த AR ரகுமான்னு சொன்னாங்க! எந்திரிக்கவே முடியாது போல

அதுவும் விவேக்கின் காமெடி மற்றும் சமூக சிந்தனையன பேச்சும் தற்போது உள்ள படங்களில் பார்க்க முடியாமல் போய்விட்டது. அடுத்ததாக மனோபாலா தன்னை எத்தனையோ பேர் தாழ்த்தி பேசினாலும் ஒரு கலைஞராக அதை ஏற்றுக் கொண்டு மக்களை என்டர்டைன்மென்ட் பண்ணி வந்தார். இவருடைய இறப்பும் மிகவும் தாங்கிக் கொள்ள முடியாத அளவிற்கு பெரிய துக்கத்தை கொடுத்தது.

அடுத்ததாக நெடுமுடி வேணு இந்தியன் முதல் படத்தில் நடித்து ஒரு நேர்மையான அதிகாரியாக மக்கள் மனதில் இடம் பிடித்தார். அப்படிப்பட்ட இவர் நீண்ட வருடங்களுக்குப் பிறகு மறுபடியும் இதில் இவருடைய பயணத்தை தொடங்கினார். இதனைத் தொடர்ந்து பல படங்களில் நடிப்பார் என்று எதிர்பார்த்த நிலையில் இவருடைய இறப்பு ஜீரணிக்க முடியாத அளவிற்கு போய்விட்டது.

அடுத்து பல படங்களில் குணச்சித்திர நடிகராகவும், வில்லனாகவும் நடித்து ஒரு சில படங்களில் இயக்குனராகவும் தன்னை நிரூபிக்க முடியாத அளவிற்கு போராடிக் கொண்டு வந்தார் மாரிமுத்து. அப்படிப்பட்ட இவருக்கு சமீபத்தில் தான் எதிர்நீச்சல் சீரியலில் குணசேகரன் கேரக்டரில் நடிக்கும் கதாபாத்திரம் கிடைத்தது. இதில் நடித்து அனைவரதுடைய மனதையும் வென்று நாடகத்திற்கு சிம்ம சொப்பனமாக எல்லாருடைய மனதிலும் இடம் பிடித்தார். அப்படிப்பட்ட இவர் தற்போது இல்லாததால் எதிர்நீச்சல் சீரியலின் டிஆர்பி ரேட்டிங்கில் இடம் பிடிக்க முடியாமல் போய்விட்டது.

Also read: முதல் பாகத்திலேயே சங்கருக்கு ஏற்பட்ட பிரச்சனை.. ஹிட்டானாலும் ராசியே இல்லாமல் முடிவு கிடைக்காத இந்தியன் 2

Trending News