வியாழக்கிழமை, ஜனவரி 16, 2025

தொடர்ந்து வரும் சிக்கலால் குழப்பத்தில் இருக்கும் கமல்.. வழி கிடைக்காமல் திண்டாடும் இந்தியன் 2

கமல் நடிப்பில் சமீபத்தில் வெளியான விக்ரம் திரைப்படம் யாரும் எதிர்பார்க்காத அளவிற்கு தாறுமாறாக ஹிட் அடித்துள்ளது. இதனால் படத்தை தயாரித்த கமல் மட்டுமல்லாமல் திரையரங்கு உரிமையாளர்கள் உட்பட பலரும் சந்தோஷத்தில் இருக்கின்றனர்.

மேலும் இந்த வெற்றியால் கிடைத்த தன்னம்பிக்கையில் கமல் நின்று போன படங்கள் மற்றும் புது படங்கள் என எல்லாத்தையும் தூசி தட்டி வருகிறார். அந்த வகையில் இவர் நடிப்பில் சில வருடங்களுக்கு முன்பு ஆரம்பிக்கப்பட்ட இந்தியன் 2 திரைப்படமும் தற்போது மீண்டும் தொடங்கப்பட இருக்கிறது.

சில பல காரணங்களால் தடைப்பட்டு போன இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு வரும் ஆகஸ்ட் 24ஆம் தேதி ஆரம்பிக்கப்பட இருக்கிறது. ஆனால் இப்பொழுது அதில் சில புதுப்புது பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளது. என்னவென்றால் இந்த படத்தில் நடித்து வந்த நெடுமுடி வேணு மற்றும் விவேக் ஆகியோர் இறந்துவிட்டனர்.

அதனால் அவர்கள் நடித்து வந்த காட்சிகள் தற்போது மீண்டும் எடுக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. அதேபோல் இந்த படத்தில் நடித்து கொண்டிருந்த காஜல் அகர்வால் தற்போது குழந்தை பெற்று நடிப்பில் இருந்து சிறிது ஓய்வு எடுத்து வருகிறார்.

அதனால் அவருக்கு பதிலாக வேறு ஒரு நடிகையை நடிக்க வைக்கிறார்களா இல்லை அவரே மீண்டும் நடிக்கப் போகிறாரா என்று ஒரு குழப்பமும் இருக்கிறது. அப்படி காஜல் அகர்வால் மீண்டும் நடிக்கும் பட்சத்தில் சிறிது கால தாமதமும் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

அது மட்டுமல்லாமல் இயக்குனர் சங்கர் தற்போது ராம்சரணை வைத்து ஒரு தெலுங்கு திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருக்கிறார். அந்தத் திரைப்படத்தை முடித்துவிட்டு தான் அவர் மீண்டும் புத்துணர்ச்சியுடன் இதில் களம் இறங்குவார் என்று கூறப்படுகிறது.

இப்படி இந்த படத்தை சுற்றி ஏகப்பட்ட பிரச்சனைகள் இருக்கிறது. இதையெல்லாம் கடந்து தான் இந்த படத்தின் ஷூட்டிங் ஆரம்பிக்க வேண்டும் என்ற நிலையில் தயாரிப்பாளர் இருக்கிறார். இதனால் விடிவு காலம் பிறந்தும் இந்தியன் 2 திரைப்படத்திற்கு வழி கிடைக்காமல் திண்டாட்டமாக இருக்கிறது.

Trending News