Indian 2 Collection: கமல் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியன் 2 கடந்த வாரம் வெளிவந்தது. ஷங்கர் இயக்கத்தில் லைக்கா தயாரித்துள்ள இப்படம் ஏழு வருடங்களாக இழுத்தடித்து வந்த நிலையில் ஒரு வழியாக ரிலீசானது.
ஆனால் தற்போது படத்திற்கு கிடைத்து வரும் நெகட்டிவ் விமர்சனங்கள் தயாரிப்பு தரப்பை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இதற்காக கோடி கணக்கில் பணத்தை வாரி இறைத்த லைக்கா இப்போது போட்ட பணத்தை எடுத்து விட முடியுமா என டென்ஷனில் இருக்கிறார்களாம்.
இது ஒரு பக்கம் இருக்க சங்கர் முன்பு மாதிரி இல்லை. அவருடைய திரை கதையில் ஏதோ மிஸ் ஆகிறது என்ற கருத்துக்களும் வெளிவந்து கொண்டிருக்கிறது. அதேபோல் முதல் பாகத்திற்கு உயிர் கொடுத்ததே ஏ ஆர் ரகுமானின் இசை தான்.
அது இரண்டாவது பாகத்தில் பெரும் குறையாக இருக்கிறது. அதேபோல் கமலுக்கு போடப்பட்ட மேக்கப்பிலும் சொதப்பி இருக்கிறார்கள் என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர். இதனாலேயே தற்போது படத்தின் வசூலும் பாதிக்கப்பட்டுள்ளது.
இந்தியன் 2 மூன்று நாள் வசூல் நிலவரம்
அதன்படி இந்திய அளவில் படத்தின் முதல் நாள் வசூல் 26 கோடிகளாக இருக்கிறது. அதை அடுத்து இரண்டாவது நாளான சனிக்கிழமை 18 கோடிகளை வசூலித்துள்ளது. நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் தியேட்டரில் கூட்டம் நிறையும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் அதிலும் ஏமாற்றம்தான் கிடைத்துள்ளது. அதன்படி இந்தியன் 2 படத்தின் மூன்றாம் நாள் வசூல் 15 கோடிகள் ஆக உள்ளது. ஆகமொத்தம் இந்த மூன்று நாட்களில் இந்திய அளவில் 59 கோடிகள் தான் வசூல் ஆகி இருக்கிறது.
மேலும் உலக அளவில் இப்படம் 90 கோடிகளை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் எதிர்பார்த்ததை விட இது குறைவு தான். ஆனாலும் இந்த வாரம் பெரிய பட்ஜெட் படங்கள் எதுவும் வெளிவராத நிலையில் இதன் வசூல் அதிகரிக்குமா என பொறுத்திருந்து பார்ப்போம்.
இந்தியன் 2 வசூலில் விழுந்த அடி
- இந்தியன் 2க்கு அடிக்காத அதிர்ஷ்டம், ஒதுங்கிய கமல்
- இந்தியன் 2க்கே இந்த அடி
- இந்தியன் 2 படமே பெரிய ஊழல்