Audio Launch: கடந்த சனிக்கிழமை இந்தியன் 2 ஆடியோ லான்ச் மிகச்சிறப்பாக நடைபெற்றது. சிம்பு, லோகேஷ் கனகராஜ், நெல்சன், என எல்லோரும் படையெடுத்து வந்திருந்தனர். பல சுவாரஸ்யமான நிகழ்வுகளை கமல் மற்றும் சங்கர் இருவரும் விழாவில் பகிர்ந்துள்ளனர்.
ஆரம்பத்தில் இருந்து இந்தியன் 2 படம் பல பிரச்சினைகளை தாண்டி வந்தது. கொரோனா காலகட்டத்தில் தொடங்கப்பட்ட இந்த படம் பல கஷ்டங்களை பார்த்து பாதியிலேயே நின்று போனது. அதன்பின் கடவுள் போல் உதயநிதி செய்த பஞ்சாயத்தால் இப்பொழுது வெற்றிகரமாக முடிந்து ரிலீஸ்க்கு தயாராகி விட்டது.
இந்தியன் 2 ஷூட்டிங் நடைபெறும் போது, ரோப் அறுந்து விழுந்து ஒரு அசிஸ்டன்ட் டைரக்டர் மரணமடைந்தார் அதன் பின் கொரோனா தடை காலத்தால் சூட்டிங் நின்றது. மீண்டும் தொடங்கிய இந்த படத்தில் இயக்குனர் சங்கர் மற்றும் சுபாஷ்கரனுக்கு மனக்கசப்பு ஏற்பட்டது. அதன் பின் விவேக் மரணம், நெடுமுடி வேணு மரணம் என பல மீள முடியாத துயரங்கள் ஏற்பட்டது.
இப்படி சூட்டிங் தொடர்ந்து நடைபெறுமா என்று யோசிக்கையில் அனைவரையும் கூப்பிட்டு பஞ்சாயத்து பேசி எல்லா பிரச்சினைகளையும் தீர்த்து வைத்தார் உதயநிதி ஸ்டாலின். இப்பொழுது இந்த படத்தின் ஆடியோ லான்ச் வெகு சிறப்பாக நடைபெற்று உள்ளது.
பாகிஸ்தான் தீவிரவாதியாக மாறிய கமல்
ஆடியோ லான்ச் விழாவில், சேனாதிபதி தாத்தா போல் கெட்டப் அணிந்து கமல் வருவார் என்று எதிர்பார்த்த நிலையில் பாகிஸ்தான் தீவிரவாதி போல் ஒரு கருப்பு உடை அணிந்து வந்து அனைவரையும் அதிர வைத்தார். சங்கர் மற்றும் கமல் இருவரும் பல சுவாரசியமான விஷயங்களை மேடையில் பேசி உள்ளனர். மறைந்த கலைஞர்கள் விவேக், நெடுமுடி வேணு, மனோபாலா போன்றவர்களுக்கு நன்றி தெரிவித்து உரையாற்றினர்.
- இந்தியன் 2 லைக்கா எடுக்கும் அஸ்திரம்
- கொள்கைகளை காற்றில் பறக்க விட்ட இந்தியன் 2 தாத்தா
- இந்தியன் 2 ரிலீசில் இருக்கும் சீக்ரெட்