டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் ஆஸ்திரேலியாவில் கடந்த வாரம் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது . இந்த தொடரில் அனைத்து நாடுகளையும் பின்னுக்குத் தள்ளி இங்கிலாந்து அணி சாம்பியன் பட்டம் வென்றது .
இந்தியா தோற்று விடும் என்று அப்பவே சுனில் கவாஸ்கர், கபில்தேவ் போன்ற முன்னாள் வீரர்கள் கூறி வந்தனர். அதற்கு ஏற்றார்போல் இந்திய அணியும் இந்தத் தொடரின் அரையிறுதிப் போட்டியில் வெளியேறியது. இதற்கு பெரும் காரணமாக இந்திய அணியின் பவுலிங் யூனிட் பார்க்கப்படுகிறது.
Also Read: மிரட்டும் 6 கீப்பர்களை கொண்ட இந்திய அணி.. மோங்கியாவையே நம்பி மோசம்போன 90’s காலகட்டம்
காயம் காரணமாக ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா விலகியுள்ளனர். இவர்களுக்கு பதிலாக மாற்று வீரர்களை சரியாக கையாள இந்திய அணி தவறிவிட்டது. ஜடேஜா கடைசி நேரத்தில் போட்டியை மாற்றக்கூடிய திறன் படைத்தவர். அதேபோல் ஜஸ்பிரித் பும்ரா ஓபனிங் விக்கெட்டுகளை எளிதில் வீழ்த்த கூடிய திறமை வாய்ந்த பவுலர். இவர்களுக்கு மாற்று வீரர்கள் என்றால் இந்திய அணி யாரைக் கொண்டு வரும்.
இருந்தாலும் முகமது சமி, அக்சர் பட்டேல் மற்றும் அர்ச்தீப் சிங் போன்ற பவுலர்களை வைத்து இந்தியா போராடியது. முகமது சமி எக்ஸ்பீரியன்ஸ்சும் இந்திய அணிக்கு கைகொடுக்கவில்லை. சில போட்டிகளில் அர்ச்தீப் சிங் சிறப்பாக செயல்பட்டாலும் முக்கியமான போட்டியில் அவர் பந்து வீச்சு எடுபடவில்லை . பேட்டிங் ஆல்ரவுண்டர் என்று அக்சர் பட்டேலை எடுத்தும் பிரயோஜனம் இல்லை.
Also Read: ஓய்வு முடிவில் ஆல்ரவுண்டர்.. ரவீந்திர ஜடேஜாவை தொடர்ந்து இந்திய அணிக்கு அடுத்த அடி
பும்ரா இல்லாததால் இந்தியாவின் பௌலிங் யூனிட் மிகவும் வலுவிழந்து போனது . அவர் ஒருவரே எதிரணியினரின் அதிரடி ஆட்டக்காரர்களை அச்சுறுத்தும் வகையில் பந்து வீசுவார். இவர் இல்லாததால் எதிரணியினர் சுலபமாக இந்திய பந்துவீச்சாளர்களை சமாளித்து விட்டனர் .
அவரை தவிர்த்து எதிரணியினரை அச்சுறுத்தும் ஒரு பந்து வீச்சாளர் என்றால் முகமது சமி, அவரை எடுத்தும் துளி கூட பிரயோஜனம் இல்லை . இப்படி மொத்த பலவீனமும் வைத்துக்கொண்டு விளையாடியது தான் இந்திய அணி உலக கோப்பையை விட்டு வெளியேறியதன் காரணமாக பார்க்கப்படுகிறது. அப்பவே இதை இந்திய முன்னாள் ஜாம்பவான்கள் தெளிவாகக் கூறி இருந்தனர்.
Also Read: இந்திய அணிக்குள் விராட் கோலி செய்யும் குழப்பம்.. பிரச்சனை இருப்பது உண்மைதான் போல