ஞாயிற்றுக்கிழமை, ஜனவரி 19, 2025

மொத்த இந்தியாவும் எதிர்பார்த்த விஷயம் நடக்கப் போகுது.. தரமான சம்பவம் செய்த விரேந்தர் சேவாக்

எதிரணி பவுலர்களுக்கு எப்பவுமே சிம்மசொப்பனமாக இருப்பவர் இந்திய வீரர் விரேந்திர சேவாக். வாசிம் அக்ரம், சோயிப் அக்தர், மெக்ராத், ஷேன் வார்ன் போன்ற வீரர்களை அச்சுறுத்தும் வீரர் சேவாக் ஆட்டத்தின் முதல் பந்தையே சிக்ஸர் மட்டும் பவுண்டரி அடித்துதான் பெரும்பாலும் போட்டியை தொடங்கி வைப்பார்.

டெஸ்ட் போட்டியை ஒருநாள் போட்டி போலவும், ஒருநாள் போட்டியை இருபது-20 போட்டி போலவும் விளையாடக்கூடியவர். எப்பொழுதுமே சமூகவலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் சேவாக், அவ்வப்போது தன் கருத்துக்களை பகிர்ந்து வருவார். பாகிஸ்தான் வீரர்கள் அடிக்கடி சமூகவலைதளத்தில் இந்தியாவை வம்புக்கு இழுப்பார்கள் அதற்கு சேவாக் தன் கருத்து மூலம் அவர்களுக்கு பதிலடி கொடுப்பார்.

இப்பொழுது சேவாக் ஒரு தரமான சம்பவம் செய்திருக்கிறார்.அவருக்கு இரண்டு ஆண் குழந்தைகள். அதில் மூத்த மகனான ஆர்யாவிர் சேவாக் இப்பொழுது டெல்லி அணிக்காக 16 வயதிற்கு உள்ளோர் பட்டியலில் செலக்ட் ஆகி உள்ளார் .

அப்பாவை போலவே அதிரடி ஆட்டம் ஆடக் கூடியவர் ஆர்யாவிர் சேவாக்.விஜய் மெர்சன்ட் கோப்பையில் விளையாட உள்ளார். இவர் விளையாடக்கூடிய ஒவ்வொரு ஷாட்டும் அவர் தந்தையை மீண்டும் பார்ப்பது போலிருக்கிறது. கூடிய விரைவில் ஆர்யாவிர் சேவாக் அடுத்த கட்டம் போயிடுவார்.

ஆகையால் அவரை அடுத்த ஜெனரேஷன் இந்திய அணிக்காக தயார் செய்து வருகிறார் விரேந்திர சேவாக். அப்பாவைப் போல பையனும் இந்திய அணியின் அதிரடி ஆட்டக்காரராக விளங்குவார் என்று இப்பொழுது சேவாக் ரசிகர்கள் ஆரவாரம் காட்டி வருகின்றனர் தற்போது இவர் ஆடும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

எதிரணியினரை மிரட்டும் விரேந்திர சேவாக் தனது யுக்தியை அப்படியே தனது பையனுக்கு சொல்லிக் கொடுத்து வளர்த்தால் நிச்சயமாக அவர் இந்திய அணியில் தலை சிறந்த பேட்ஸ்மேனாக உருவாகுவார் என்பதில் சந்தேகமே இல்லை. இப்பொழுது ஆர்யாவிர் சேவாக் ஒரு பந்துகளையும் விடாமல் துரத்தி அடிப்பது அப்படியே அவர் தந்தையை நினைவு படுத்தி வருகிறது.

Trending News