சனிக்கிழமை, ஜனவரி 18, 2025

கள்ளத் தொடர்பினால் பிரியும் காதல் ஜோடி.. 12 வருடங்களுக்கு பின் முறியும் சானியா மிர்சா திருமண வாழ்க்கை

சினிமாவில் மட்டுமல்லாமல் ஒவ்வொரு துறையிலும் பிரபலமாக இருப்பவர்கள் காதலித்து திருமணம் செய்து கொள்வது புதிதல்ல. அந்த வகையில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரை இந்திய விளையாட்டு வீராங்கனை ஒருவர் சில வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

கோலாகலமாக நடந்த அந்த திருமணம் தற்போது விவாகரத்தில் முடிய இருக்கிறது. இந்திய டென்னிஸ் வீராங்கனையாக புகழ்பெற்ற சானியா மிர்சா, பாகிஸ்தான் கிரிக்கெட் வீரரான சோயிப் மாலிக்கை காதலித்து கடந்த 2010 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர் 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்த தம்பதிகளுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்தது.

Also read:அதர்வாவை அடித்து துரத்திய ஐஸ்வர்யா.. 2 கிரிக்கெட் வீரர்களுடன் களம் இறங்கும் சூப்பர் ஸ்டார்

அதன் பிறகு நன்றாக சென்று கொண்டிருந்த இவர்களுடைய திருமண வாழ்க்கையில் தற்போது சில கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டிருக்கிறது. இது குறித்து கடந்த சில மாதங்களாகவே அரசல் புரசலாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகி வந்தது. ஆனாலும் இது உறுதியாகாத தகவலாகவே இருந்தது.

இந்நிலையில் சமீப காலமாக சானியா மிர்சாவின் சோசியல் மீடியாவில் வெளிவரும் பதிவுகள் ஊடகங்களின் சந்தேகத்தை உறுதிப்படுத்தும் வகையில் இருக்கிறது. அதாவது அவர் தன் மகனுடன் இருக்கும் ஒரு போட்டோவை வெளியிட்டு இந்த தருணம் என்னை மிகவும் கடினமான நாட்களுக்கு இழுத்துச் செல்கின்றது என்று குறிப்பிட்டு இருந்தார்.

Also read:இந்தியன் 2 படத்தில் இணையும் பிரபல கிரிக்கெட் வீரரின் தந்தை.. ஒரு வேளை கமலுக்கு டூப்பா இருப்பாரோ!

அது மட்டுமல்லாமல் சானியா மிர்சாவுக்கு அவருடைய மகன் முத்தமிடும் புகைப்படத்தை வெளியிட்டு உடைந்த இதயங்கள் எங்கே செல்லும் என்ற பதிவையும் போட்டிருந்தார். இதனால் சானியா மிர்சா தன்னுடைய கணவரை பிரிந்து விட்டதாகவும் விவாகரத்துக்கு தயாராகி வருவதாகவும் கூறுகின்றனர். ஆனால் கடந்த அக்டோபர் 30ஆம் தேதி இவர்கள் இருவரும் தங்கள் மகனின் பிறந்த நாளை சேர்ந்தே கொண்டாடி இருக்கின்றனர்.

sania-mirza
sania-mirza

அது குறித்த புகைப்படங்களை சோயிப் மாலிக் தன்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் மகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார். ஆனால் சானியா மிர்சா இதுவரை தன் கணவருடன் சேர்ந்து இருக்கும் புகைப்படங்கள் எதையும் வெளியிடவில்லை. அதேபோன்று தன் மகனின் பிறந்த நாள் போட்டோவையும் அவர் சோசியல் மீடியாவில் பகிரவில்லை. இதனால் அவருடைய பிரிவு கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. ஆனால் சம்பந்தப்பட்ட இருவரும் இது குறித்து எந்த அறிவிப்பையும் இதுவரை வெளியிடவில்லை.

இந்நிலையில் சானியா மிர்சாவின் கணவருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு இருந்ததாகவும், அதனால் கணவன், மனைவி இருவரும் தற்போது தனித்தனி வீடுகளில் வசித்து வருவதாகவும் தகவல்கள் கிடைத்துள்ளது. கிட்டத்தட்ட திருமணம் ஆகி 12 வருடங்கள் கழிந்த நிலையில் கள்ளத்தொடர்பின் காரணமாக விவாகரத்தை நோக்கி சென்றிருக்கும் இந்த ஜோடியை பற்றி தான் தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Also read:கிரிக்கெட் வீரரின் பயோபிக்கில் நடிக்கும் சிவகார்த்திகேயன்.. டாப் கியரில் எகிரும் மார்க்கெட்

Trending News